கண்துடைப்பு இலவசங்கள்

பண்ணைகளிலே பணி செய்த பண் ணை அடிமைகளுக்கு, அவர்கள் திரும ணத்தின் போது தாலியும், கூரப்புடவை யும், தனிக் குடித்தனம் போகும்போது குறுணி நெல்லும் பண்ணையார்கள் இலவசமாக தருவார்கள். பண்i™ அடிமைகளுக்கு, அவர்கள் வாழ்க்கை முழுவதும் மறக்க வொண்ணா நிகழ்ச்சியாக அவர்களது நெஞ்சங்களிலே நிழலாடும். குடும்பம் முழுவதும், வாழ்நாள் முழுவதும் பண் ணைக்கு நாம் கடமைப்பட்டவர்கள் என் பதை நினைவுறுத்திக் கொண்டே இருக்கும்.

பண்ணையார்கள், பண்ணை அடிமை களுக்கு ஒரு நாளைக்கு 8 மணி நேரம் தான் வேலை கொடுத்தார்களா? செய்த வேலைக்கு கட்டுப்படியான கூலித் கொடுத் தார்களா? விவசாயிகளுடைய, கூலித் தொழிலாளர்களுடைய நிலங்களையே ஆக்கிரமித்துக் கொண்டு, அவர்களை குத்தகை விவசாயிகளாகவும், கூலி அடி மைகளாகவும் ஆக்கி கசக்கி பிழிந்தார்க ளல்லவா? வீட்டுமனையும் கிடையாது. சாகுபடி நிலமும் கிடையாது. வாழ்க்கையின் சகல உரிமைகளையும் பிடுங்கிக் கொண்டு விவசாயிகளையும், கூலித் தொழிலாளர் களையும் கையறு நிலையிலே வைத் தார்களல்லவா?

ஆனால் இத்தனை துரோகத்தையும் மறக்கடிக்க கல்யாணத்திற்கு தாலியும், கூரப் புடவையும், புதுக் குடித்தனம் போகும் போது குறுணி நெல்லும் கொடுத்து தனது கட்டுப்பாட்டுக்குள் வைத்து காத்து வந்தது பண்ணையார் ஆதிக்கம்.

தற்போது திமுக வெளியிட்டுள்ள தேர் தல் அறிக்கையிலும், கிரைண்டர்அல்லது மிக்சி என்பன போன்ற இலவசங்கள், தாங்கள் மீண்டும் ஆட்சிக்கு வந்தால் வழங்கப்படும் என பிரகடனப்படுத்தியுள் ளனர்.

இன்றைய தினம் உழைப்பாளி மக்க ளுக்கு இந்திய அரசியல் சாசனம், அதன் படி அவ்வப்போது நாடாளுமன்றம், சட்ட மன்றம் மூலம் வரையறுக்கப்பட்ட சட்டங் கள், இவைகள் தாக்குதலுக்கு உள்ளான போது நீதிமன்றங்கள் வழங்கிய சில நல்ல தீர்ப்புகள், உழைப்பாளி மக்களுக்கு பல அடிப்படை உரிமைகள் வழங்க, பாது காக்க தொடர வழங்கப்பட்டதாகும்.

தற்போதைய திமுக தேர்தல் அறிக் கை இவற்றின் முள்ளின் நுனி அளவு கூட தொடவில்லையே.

நகர்ப்புறத்திலும், கிராமப்புறத்திலும் உள்ள உழைப்பாளர்களுக்கு அடிப்படை யாக வேலை கிடைக்க வேண்டும். தமிழ கத்தில் வேலை கிடைக்காததால் 60 லட் சம் பேர் வேலை தேடி வெளியேறியிருக் கிறார்கள் என்ற அவலச் சூழ்நிலைமை நிலவுகிறது. 55 லட்சம் படித்த இளைஞர் கள் வேலை கிடைக்காது அல்லாடிக் கொண்டிருக்கிறார்கள்.

வேலை கிடைத்து கூலி வேலை செய் தவர்களுக்கு முழு அளவு கூலி வழங்கப் படுகிறதா?

இடதுசாரிக் கட்சிகள் 40 ஆண்டு களாக போராடி பெறப்பட்ட மத்திய அரசின் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைத் திட்டத்தை கலைஞர் எப்படி அமல்படுத் தினார்? 2006-07ம் ஆண்டு 22 நாட்கள், 2007-08 ம்ஆண்டு 34 நாட்கள், 2008-09ம் ஆண்டு 54 நாட்கள், 2009-10ம் ஆண்டு 66 நாட்கள், 2010-11 இதுவரை 37 நாட்கள் தானே வேலை கொடுத்தார். கூலியும் ரூ.32, ரூ.44, ரூ.56, ரூ.60, ரூ.70, ரூ.80 தானே கொடுத்துள்ளார்.

அடிப்படை தேவையான வீட்டுமனை என்பது 35 லட்சம் குடும்பங்களுக்கு கிடையாது. வீட்டுமனை வேண்டும் என்று கேட்ட போது; வீட்டுமனை தர முடி யாது; கூரை வீடு உள்ளவர்களுக்கு கான் கிரீட் வீடு கட்டித் தருகிறேன் என்று திசைதிருப்பி விட்டவர் கலைஞர்.

கிராமப்புற உழைப்பாளர்களுக்கு தமிழகத்தில் சென்ற முறை கலைஞர் ஆட்சிக்கு வரும்போது இருந்த சுமார் 50 லட்சம் ஏக்கர் தரிசு மற்றும் புறம்போக்கு நிலங் களை எடுத்து வழங்க போராடினோம்.

அந்த நிலங்கள் அரசு கையில் இல்லை. எனவே நிலம் வழங்க முடியாது என கைவிரித்துவிட்டார்.

இப்போது அந்த நிலங்கள் பன்னாட்டு ஸ்டெர்லிங் கம்பெனி, மேக்ஸ் ஒர்க் கம்பெனி, நம்நாட்டு மூல்சந்த் கம்பெனி, கல்லூரிகள், வணிக வளாகங்கள் என முன்னாள், இந்நாள் மத்திய-மாநில அமைச் சர்கள், ஐஏஎஸ் அதிகாரிகள், ஐபிஎஸ் அதிகாரிகள், நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள் அல்லவா ஆக்கிரமித்து வைத்துள்ளனர்.

எப்போதாவது விவசாயிகள் விளை பொருட்களுக்கு கட்டுப்படியான விலை கொடுத்தாரா? அரசு கொள்முதல் செய் ததா? முக்கியமாக நெல்கொள்முதல் 12 சதவீதத்திற்கு மேல் செய்யப்படவில்லையே.

ஏழை சிறு விவசாயிகள் செய்யும் விவ சாயம் தொடர்ந்து நலிவடைந்தல்லவா வந் துள்ளது. ஆண்டுக்கு 5 லட்சம் விவசாயி கள் நிலத்தை விற்றுவிட்டு, விவசாயத் தொழிலாளர்களாக மாறுகிறார்கள். வேளாண் உற்பத்தி குறைந்து வருகிறது. உற்பத்தி பரப்பு குறைந்து வருகிறது.

மறுபுறத்தில் திமுக அரசு சொக்கட் டான் போட்டுக்கொண்டு “கம்பெனிகள் மூலம் சாகுபடி” மற்றும் “ஒப்பந்த சாகு படி” முறை மூலம் பன்னாட்டு, இந்நாட்டு பெரிய கம்பெனிகள் பணப்பயிர் உற்பத்தி செய்து, ஏற்றுமதி செய்து அந்த நிறுவனங் கள் கொழுத்து வளரும் நிலைமைக்கு திமுக அரசு அப்பட்டமாக துணை போனதா? இல்லையா? அதன் மூலம் திமுக அதன் தலைமை ஆதாயம் அடைந் ததா? இல்லையா? 

5 ஆண்டுகளாக திமுக தமிழ்நாடு அரசு சார்பில் தொழிற்சாலைகள் உரு வாக்கவில்லையே.

அது போல மின்சார உற்பத்தி நிலை யங்களும் உருவாக்கப்படவில்லையே.

சீரழித்து வருகிற தாராளமயக் கொள் கைகளை அப்படியே தமிழகத்தில் அமல் படுத்தி தனியார் தொழிற்சாலைகள் அமைக்கவும், பன்னாட்டு நேரடி நிதி தாராளமாக வரவும் அவர்கள் கொள்ளைய டிக்கவும், அதில் திமுக வலுவான ஆதா யம் பெறவுமே இந்த 5 ஆண்டு காலம் முழுவதும் செயல்பட்டுள்ளது.

மின் உற்பத்தியில் தமிழ்நாடு அரசு சார்பில் தற்போது செயல்படும் நிலையங் களில் விரிவாக்கம் செய்வதாகக் கூறப்பட் டது. அவைகள் ஏதும் நடைபெறவில்லையே.

மத்திய-மாநில அரசுகள் சார்பில் தொழிற்சாலைகள் நிறுவுவது, அழிந்துவ ரும் விவசாயத்தை மேம்படுத்துவது, வேலைவாய்ப்பு, கட்டுப்படியான சம்பளம், விவசாயிகள் விளைபொருட்கள் கொள் முதல், குறைந்து வட்டியுடன் கடன் வசதி, வீட்டுமனை, சாகுபடி நிலம் என்ற அடிப்படை உரிமைகளை வழங்காமல் ஒருக்காலும் கண்துடைப்பு இலவசங்க ளால் உழைக்கும் மக்கள் பொருளாதார மேம்பாடு, சமூக மேம்பாடு அடைய முடி யாது.

இத்தகைய மேம்பாட்டுக்கான திட்டங் கள் ஏதும் திமுக தேர்தல் அறிக்கையில் காண முடியவில்லை.

இத்தனை காலமும் ஏமாற்றி வந்த கலைஞர், இனி மேலும் மக்களை ஏமாற்ற முடியாது. 

கட்டுரையாளர், அகில இந்திய துணைத் தலைவர்,அ.இ.வி.தொ.ச.

இன்றைய கார்ட்டூன்