மூடப் பழக்கங்களை ஒழிக்க வந்த முன்னோடி

சிந்தனைச்சிற்பி சிங்காரவேலர் சமு தாயத்தின் அனைத்துப் பிரிவுகளிலும் தம் சிந்தனையை வெளிப்படுத்திய மாமனிதர். அரசியலிலும், தொழிற்சங்க இயக்கத்திலும் முன்னோடியாக இருந்ததைப் போலவே மூடப்பழக்க வழக்கங்களை ஒழிப்பதிலும், அறிவியல் மனப்பான்மையை வளர்ப்பதிலும் முன்னோடியாகத் திகழ்ந்தவர். சிந்தனை யாளர்கள் சிலர் அரசியல் தளத்தில் மட்டுமே இயங்குவர். சிங்காரவேலரோ இவ்விரண்டு தளங்களிலும் இயங்கியவர்; இதில் வியப்பு என்னவென்றால், இவ்விரண்டு தளங்களி லும் அவர் முன்னோடியாக இருந்ததுதான்; இதில் மற்றொரு வியப்பும் உண்டு; அரசியல் உணர்வு வேர்பிடிக்கும் தொடக்கக் காலத்தில் அவர் இவ்வாறு இருந்ததுதான் அந்த வியப்பு; இந்த வியப்பின் ஆளுமை தான் சிங்கார வேலர்.


நிலத்தில் நன்கு பயிர் விளைவிக்க வேண்டுமாயின் நிலத்தை நன்கு உழுதல் வேண்டும்; மண்ணைப் புரட்டிப் போட்டு, எருவிட்டு, நீர் பாய்ச்சினால்தான் பயிர் விளையும்; நிலத்திலுள்ள களைகளையும் அகற்ற வேண்டும்; இவ்வாறு செய்தால் தான் பயிர் நன்கு விளையும். முற்போக்குச் சிந்தனைகளை, சீரிய அரசியல் சிந்தனை களை மனித மனத்தில் பதிக்க வேண்டுமா யின், ஏற்கெனவே உள்ள வேண்டாத எண் ணங்களைக் கீறி வெளியே எடுத்தல் வேண் டும்; அவற்றைப் புரட்டிப் போட்டு அகற்றி னால்தான் புதிய சிந்தனைகள் நன்கு பதியும்; புதிய சிந்தனைகள் நன்கு பதிவதற்குத் தான் சிங்காரவேலர் பண்பாட்டுத் தளத்திலும் இயங்கி உள்ளார்; மனித சமுதாயத்தின் மீது அவருக்கு இருந்த ஆழ்ந்த அக்கறையும் ஈடுபாடுமே அவரை அவ்வாறு இயங்க வைத்தது எனலாம்.

சிங்காரவேலர் அரசியல் தளத்தில் எத்தனை கட்டுரைகளை வரைந்தாரோ, அவற்றிற்கு கூடுதலாகப் பண்பாட்டுத்தளத் தில் அவர் அரிய கட்டுரைகளை வரைந் துள்ளார். அவரது அனைத்துக் கட்டுரைகளை யும் ஒருங்கு நோக்கின் இவ்வுண்மை புலப் படும். சமுதாயத்தின் இழிவுக்கும், வறு மைக்கும், ஏற்றத்தாழ்வுக்கும்,கேடுக்கும், தலைவிதியே காரணமென்றும், “அவனன்றி ஓரணுவும் அசையா” தென்னும் மூடநம்பிக் கை ஆழ வேர் பிடித்து மக்கியுள்ள ஒரு சமு தாயத்தில் பண்பாட்டுத் தளச் செயற்பாடுகள் மிக இன்றியமையாதவை; இந்த இன்றி யமையாமையை நன்கு உணர்ந்தவர் சிங்கார வேலர்; இது குறித்து அவர் ‘குடி அரசு’ இத ழில் அரிய கட்டுரைகளை வரைந்துள்ளார்; அக்கட்டுரைகளின் முக்கியத்துவம் குறித்தே தந்தை பெரியார், அவற்றைப்பின்னாளில் “விஞ்ஞான முறையும் மூடநம்பிக்கையும்” எனும் பெயரில் இரு பகுதிகளாக வெளியிட் டார். அந்நூலின் சிறப்பைக் கருதித் திராவிடர் கழகம் இன்றுவரை பல பதிப்புகளாகத் தொடர்ந்து வெளியிட்டு வருகிறது.

அந்நூலில் நம்நாட்டில் மண்டியுள்ள பில்லி, சூனியம், குறிபார்த்தல், தெய்வமாடல், குளிச்சம் கட்டல், கழிப்பு எடுத்தல், தூர திருஷ்டி பார்த்தல், மையோட்டுப்பார்த்தல், கைரேகை பார்த்தல், சோதிடம் பார்த்தல், நட்சத்திரம் பார்த்து ராசி கூறல், தண்ணீர் கண்டுபிடித்தல், புதையல் தேடுதல், மந்திரம் கூறுதல், போன்ற பல மூடநம்பிக்கைகளை அவர் கேள்விக்கு உட்படுத்துகிறார்; கேள் விக்கு உட்படுத்தும் போது வெறும் அனுபவ அறிவைக் கொண்டு மட்டும் அவற்றை மறுக்காமல், விஞ்ஞான நூல்களின் துணை கொண்டு ஆதாரங்களோடு மறுக்கிறார்; அதாவது வேரோடு பெயர்த்து எடுக்கிறார், இவற்றில் ஓரிரண்டை நோக்கினாலே உண் மை விளங்கும். இங்கு முதலில் பில்லி சூனி யத்தைப் பற்றி அவர் எவ்வாறு எழுதுகிறார் என்பதை நோக்குவோம்.

கடவுள் கற்பனையைக் காட்டிலும் பில்லி சூனிய ஆன்ம கற்பனையால் சமுதாயம் அடைந்த கேடுகள் மிகுதியானவை என் கிறார்; மனித உடலில் ஆன்மா ஒன்று இருப் பதாகவும், அந்த ஆன்மாவை சூனியக்காரர் கள் சூனியத்தின் மூலம் வேறொருவர் மீது செலுத்தி அவனைக் கொல்வதாக நம் மக்கள் நம்புகிறார்கள்; முதலில் ஆன்மா இருப்பதாக கருதுவதே பெரும் பொய் என்பதை அவர் அறிவியல் நூல்களின் துணை கொண்டு மிகச் சரியாக நிறுவுகிறார். நமது உலகம், நிலம், நீர், தீ, காற்று ஆகிய பொருள்களால் ஆனதென்றும் அப்பொருளில் உண்டான குழம்பிய பொருளில் இருந்து சிறு முட் டைகள் உண்டாகின என்றும், அம் முட்டை கள், பொட்டாசியம், பாஸ்பரஸ் இரும்பு, கரி ஆகியவற்றின் கூட்டுப் பொருளென்றும் ஆதி முட்டைகளிலிருந்து சிறு முட்டைகளும் இவற்றிலிருந்து சிறு கிருமிகளும் இவற்றி லிருந்து புழுக்களும் இவற்றிலிருந்து மீன்க ளும் இவற்றிலிருந்து தவளைகளும் இவற்றி லிருந்து ஊர்வனவும் இவற்றிலிருந்து விலங் குகளும் இவற்றிலிருந்து மனிதக் குரங்கும், இதிலிருந்து மனிதனும் தோன்றினான் என்றும் கூறுவார். இந்த மனிதன் உயிர்ப் பொருள்களின் கலப்பால் தானியங்கி முறை யில் இயங்குகிறானேயன்றி ஆன்மா என்ற பொருளில் அன்று என்கிறார்; வெற்றிலையும் சுண்ணாம்பும் சேரும்போது சிவப்பு வண்ணம் தானாகவே தோன்றுவது போன்று உயிர்ப் பொருள்களின் கூட்டுக் கலப்பால் மனிதன் இயங்குகிறான் என்கிறார்; இந்தக் கூட்டுப் பொருள்களின் கலப்பு வலுவிழக்கும் போது மனிதனின் இயக்கம் நின்று விடுகிறது; அதாவது சாகிறான் என்கிறார்; இவற்றால் மனித இயக்கத்திற்கும் ஆன்மாவுக்கும் எவ்வித ஒட்டும் உறவும் இல்லை என்கிறார்; ஆன்மா ஒன்று இல்லாத போது அதனைச் சூனியக்காரனால் எப்படி ஏவ முடியும்? என்கிறார்; இதுதானே உண்மை.

இந்த உண்மை அறியாமல் பாமர மக்கள் இந்த மாய வலையில் விழுந்து சாவது நியாயமாகுமா? பகுத்தறிவாகுமா? என்கிறார். இந்த சூனியக் கற்பனை நம் காலத்தில் தோன்றியது அன்று; அது வேத காலத்தி லிருந்தே இந்தியாவில் இருந்து வந்திருக் கிறது ; குறிப்பாக யஜூர்வேதத்தில் இது பற் றிய குறிப்பு இருக்கிறது; ஏன் உலகின் பல நாடுகளிலும் இருந்திருக்கிறது என்கிறார்.

சூனியம் தோன்றுவதற்கு மனிதனின் அறி யாமை மட்டும் காரணம் அன்று, மனிதனின் சுயநலம், பேராசை போன்றவற்றையே அடிப்படைக் காரணமாகும் என்கிறார்.பிறர் சொத்தை அபகரிப்பதற்கோ,பிற மகளிரை மயக்குவதற்கோ, தமக்குப் போட்டியாக இருப்போரை கெடுப்பதற்கோ அழிப்பதற்கோ சூனியத்தை ஏற்படுத்தினர் என்றும், பிறகு நோயை, துன்பத்தைப் போக்குவதற்கும் சூனி யத்தைப் பயன்படுத்தி உள்ளனர் என்றும் கூறுகிறார். சூனியம் தோன்றுவதற்கு மற் றொரு காரணமும் உள்ளது என்கிறார்; கை வருத்தி உழைக்க எண்ணாத சோம்பேறிகள் ஏமாற்று வழியில் பிழைப்பதற்காகவும் சூனி யத்தை ஏற்படுத்தினர் என்று கூறுகிறார்.

கல்வியறிவும், பகுத்தறிவும்,அறிவியல் மனப்பான்மையும் மிகவும் குறைந்த நம் நாட் டில் மட்டுமின்றி, தொழிற் புரட்சி ஏற்பட்ட இங்கிலாந்து நாட்டில் இப்பழக்கம் கொடி கட்டிப் பறந்துள்ளது. மாக்பெத் நாடகத்திற்கு சூனியக்காரி சூனியத்தின் மகிமையைக் கூறி அவனை ஏற்றுக் கொள்ளச் செய்தது போல், ஷேக்ஸ்பியர் காலத்திற்குப் பின் தோன்றிய இரண்டாம் சார்லஸ் கூட சூனியத்தில் நம்பிக் கையுடையவராக இருந்துள்ளார்; சூனியத் துக்கு எதிராக மக்கள் விழிப்புணர்வு பெற்றுப் போராடிய போதும், இலண்டன் நாடாளுமன் றம் சட்டத்தின் மூலம் சூனியக்காரர்கள் மீது நடவடிக்கை எடுத்தபோதும் இரண்டாம் ஃப்ரான்சிஸ் பேகன் என்ற சிந்தனையாளர் கூட அதில் நம்பிக்கை கொண்டவராக இருந் துள்ளனர்; நம் நாட்டில் இன்றும் கூடச் சில அரசியல் தலைவர்களும், ஆட்சியில் இருப் பவர்களும், நீதிபதிகளும், பேராசிரியர்களும் இதில் நம்பிக்கையுடையவர்களாக இருப் பதை அறியலாம்;

“இக்கொடிய பழக்க வழக்கங்களின் ஆதாரங்களை விளக்குவது மாத்திரம் போதாது, இதன் ஆபாசங்களைத் தெரியப் படுத்தலும் போதாது. இவைகளால் எழும் கெடுதல்களை விளக்குவதும் போதாது; இந்த மாதிரி ஈனத்தை நீடிக்கச் செய்யும் மந்திரக் காரர்களையும், சூனியக்காரர்களையும் குற்ற வாளிகளாகத் தண்டிக்கவும் பகுத்தறிவுச் சங்கத்தோர் ஆதிக்கம் பெற வேண்டும். பகுத்தறிவுச் சங்கத்தோடு நின்றால் மட்டும் போதாது; அரசியலில் நம் பிரதிநிதிகளை அனுப்பி இந்தக் கொடுமைகளை நீக்கும் நீதி மார்க்கங்களைக் கையாள வேண்டும். சட்டங் களால் தண்டிக்கப்படாமல் இம் மகாபாதகப் பழக்கங்கள் ஓழியவே ஓழியா; பகுத்தறிவுச் சங்கத்தார்க்குப் பதிலாக நம் நாட்டில் உழைத்து வரும் சுயமரியாதைக் கூட்டத்தார் இதன் விஷயமாக அரசியலில் கிளர்ச்சி செய்ய வேண்டும்; அரசியல் ஆதிக்கம் பெறா மல் எந்தச் சமூகத் தீமைகளையும் வேரறுக்க முடியா என்பது அவர் காட்டிய வழியாகும்.

“போர்க்குணம் மிகுந்த செயல் முன்னோடி

பொதுவுடமைக்கு ஏகுக அவர் பின்னாடி”

இன்று தோழர் சிந்தனைச் சிற்பி

சிங்காரவேலர் பிறந்த நாள்

இன்றைய கார்ட்டூன்