சோசலிச நாடாக மாற்றுவதை நிறுத்தும் எண்ணமில்லை: வெனிசுலா ஜனாதிபதி சாவேஸ் உறுதி

காரகாஸ், பிப்.15-

வெனிசுலாவை ஒரு சோசலிச நாடாக மாற்றும் தனது முயற்சிகளை நிறுத் தும் எண்ணம் எதுவும் தனக்கில்லை என்று அந் நாட்டின் ஜனாதிபதி ஹியூகோ சாவேஸ் உறுதியாகத் தெரி வித்துள்ளார்.

19 ஆம் நூற்றாண்டின் விடுதலைப் போராட்ட கதாநாயகர் சைமன் பொலி வாரின் பெயரைத் தனது திட்டத்திற்கு சாவேஸ் சூட் டியுள்ளார். பொலிவாரியப் புரட்சி என்றழைக்கப்படும் சோசலிச நடவடிக்கைகள் தனக்குப்பிறகும் தொடரும் என்று அவர் குறிப்பிட்டார். தொலைக்காட்சி ஒன்றிற்கு அளித்த பேட்டியில்தான் அவர் இவ்வாறு தெரிவித் துள்ளார். அந்தப்பேட்டி யில் மேலும் பேசிய அவர், நான் ஒருவேளை அரசிய லிலிருந்து ஓய்வு பெற்று விட்டாலும் கூட எனது அரசியல் சகாக்கள் பொலி வாரியப் புரட்சியை நிறைவு செய்வார்கள்.

புரட்சிகர குணமிக்க இளைஞர்கள் தற்போது நடைபெற்று வரும் அரசி யல் போரை வழிநடத்திச் செல்வார்கள். தற்போ துள்ள எதிர்க்கட்சியின ருக்கு அரசியல் எதிர்காலம் எதுவுமில்லை என்று கூறி யுள்ளார். சர்வாதிகார ஆட் சியை நோக்கி சாவேஸ் சென்று கொண்டிருக்கிறார் என்று எதிர்க்கட்சிகள் குற் றம் சாட்டினாலும், ஒவ் வொரு மாற்றத்திற்கும் பொது வாக்கெடுப்பு நடத் தியே சாவேஸ் செயல்படுத் துகிறார் என்பதை சோச லிஸ்ட் கட்சியினர் சுட்டிக் காட்டுகிறார்கள். இரண்டு ஆண்டுகளுக்கு முன்பாக வாக்கெடுப்பில் தோல்வி கிடைத்தாலும், அதை மக்க ளின் தீர்ப்பாக சாவேஸ் ஏற்றுக் கொண்டார் என் பதும் குறிப்பிடத்தக்கது.

நாட்டின் அடுத்த கட் டம் பற்றி சாவேஸ் உறுதி யாகப் பேசிக்கொண்டிருக் கும் வேளையில், வரவிருக் கும் ஜனாதிபதித் தேர்தலில் சாவேஸை எதிர்கொள்பவர் யார் என்பதை எதிர்க்கட்சி களால் முடிவு செய்ய முடி யவில்லை. 2012 ஆம் ஆண் டில் நடக்கப்போகும் வெனி சுலா ஜனாதிபதித் தேர்த லில் நின்று வெற்றிப் பெறப் போவதாக சாவேஸ் அறி வித்துள்ளார். வெனிசுலா மக்களுக்காக புதிய வீட்டு வசதித் திட்டத்தையும் அவர் இந்தப் பேட்டியின்போது வெளியிட்டார்.

இன்றைய கார்ட்டூன்