வேற்றுமையில் ஒற்றுமை: நாட்டின் ஜீவநாடி

இந்தியாவில் வாழும் இஸ்லாமியர்கள் ‘ஹஜ்’ யாத்திரை மேற்கொள்வது நாடறிந்த விஷயமாகும். மத்திய அரசு அப்படி யாத்திரை செய்யும் இஸ்லாமியர்களுக்கு ஒவ்வொரு ஆண்டும் யாத்திரை செலவுக்காக “ஹஜ் கமிட்டி சட்டம்” வழங்கும் சலுகைப்படி மானி யம் வழங்குவதும் நாம் அறிந்த தகவலாகும். அந்த மானியத்துக்கும் சூனியம் வைக்க “மாண்புமிகு” முன்னாள் மாநிலங்களவை யின் உறுப்பினர் “பிரபுல் கொராடியா” என்பவர் (மறந்துவிட வேண்டாம், இவர் பாரதிய ஜனதா கட்சியைச் சேர்ந்தவர்) உச்சநீதிமன்றத்தில் வழக் கொன்று தொடுத்தார். அவருடைய ஆட்சே பணையே இப்படி மானியம் வழங்குவதே அர சியல் சட்டம் 14 மேலும் 15 விதிக்குப் புறம்பா னது; அதோடு குறிப்பாக விதி 27க்கு விரோத மானது என்று கொதித்துள்ளார். மேலும் அவர் சொல்லும் வாதம், நான் ஓர் இந்து, அரசுக்கு நேர்முக வரியும், மறைமுக வரியும் செலுத்து கிறேன். என் வரியில் ஒரு பகுதி இஸ்லாமியர் கள் செல்லும் ஹஜ் யாத்திரைக்கு விமானக் கட்டணத்துக்கு மானியமாக வழங்கப்படு கிறது. இஸ்லாமியர்களுக்கு மட்டும் வழங்கப் படுகிறது. ஒரு வருடத்திற்கு ரூ. 280 கோடி வரை இஸ்லாமியர்களுக்கு மத்திய அரசு செலவு செய்கிறது. இப்படி மத்திய அரசு செய் வது அரசியல் சட்டங்களுக்கு எதிரானது மட் டுமல்ல, மக்கள் கொடுக்கும் வரிப்பணத்தை இப்படி செலவழிப்பது அரசின் கஜானாவை வீணடிப்பதும் ஆகும் என அங்கலாய்க்கிறார்.

இவர் சொல்லும் இந்திய அரசியல் சட் டங்கள் 14, 15, 27 முதலிய விதிகளுக்குப் புறம் பானது என்பது தான் என்ன?

அரசியல் சட்ட விதி 14 சொல்வது: “அரசு, இந்திய ஆட்சிப் பரப்பிற்குள் உள்ள எவ ருக்கும் சட்டத்தின் முன்னிலையில் சமமாக நடத்தப் படுவதையோ, சட்டங்களின் சமமான காப்பளிப்பையோ மறுத்தல் ஆகாது.”

விதி 15 சொல்வது: “சமயம், இனம், குலம், பாலினம், பிறப்பிடம் மட்டுமோ, அவற்றில் எதனை மட்டுமோ, காரணங்களாகக் கொண்டு, குடிமகன் எவருக்கும் எதிராக” அரசு வேற்றுமை பாராட்டுதல் ஆகாது.”.

விதி 27 செல்வது என்ன:- எந்த வரிகளின் அடைதொகை, குறிப்பிட்ட சமயம் அல்லது சமயக் கிளை எதனின் வளர்ப்பாட் டிற்காக அல்லது பேணி வருகைக்காகச் செலவுகளை செய்வதற்கென்று குறித்த வகைக்காக ஒதுக்கம் செய்யப்பட்டிருக்கின் றதோ அந்த வரிகள் எவற்றையும் செலுத் தும்படி எவர் ஒருவரும் கட்டாயப்படுத்துதல் ஆகாது.”

இதைப் பிடித்துக் கொண்டு தான் பிரபுல் கொராடியா (பாஜக), மத்திய அரசு மக்கள் கொடுக்கும் வரிப்பணத்தை இஸ்லாமிய மதத் துக்குச் செலவு செய்கிறது. இது அரசியல் சட்ட விரோதம் என ஆட்சேபிக்கிறார்.

இந்த வழக்கில் இது பற்றி உச்சநீதிமன்ற நீதிபதிகள் மார்கண்டேய கட்ஜூ, ஜியான் சுட்ஹா மிஸ்ரா வழங்கிய தீர்ப்பு பெருமைக் குரியது.

“அரசு வசூலித்த வரிப் பணத்தில் ஒப்பிட் டளவில் ஒரு சிறு தொகையை ஏதேனும் ஒரு மதத்திற்கு சில வசதிகளுக்காக, சௌகரியத் துக்காக, சலுகைக்காக வழங்குவது அரசியல் சட்டம் பிரிவு 27 ஐ மீறுவதாகாது. பெரும் தொகையை ஏதேனும் ஒரு குறிப்பிட்ட மதத்துக்கு செலவு செய்தால்தான் சட்ட விதி 27ஐ மீறியதாகும்.

மாநில அரசு கும்பமேளாவிற்கு ஒரு சிறு தொகையை செலவு செய்கிறது, குடிமக்கள் மான்சரோவர் யாத்திரை செய்ய சில வசதி களுக்காக மத்திய அரசு ஒரு சிறிய தொகை யை செலவு செய்கிறது. அதே போல பாகிஸ் தானில் உள்ள குருத்துவாரா, மேலும் அது போன்ற கோயில்களுக்கு போக இந்துக்களுக் கும் சீக்கியர்களுக்கும் சில மாநில அரசுகள் மானிய உதவிகள் செய்கின்றன. அரசாங்கம் வசூல் செய்கிற மொத்த வரித் தொகையில் இந்த செலவுகள் மிக மிகக் குறைவு. இதில் ஏதும் பாரபட்சம் இல்லை. அதோடு நாடாளு மன்றத்துக்கு ஹஜ் கமிட்டி சட்டம் நிறை வேற்ற அதிகாரமும், தகுதியும் இருக்கிறது.” என்று கூறி மூத்த வழக்கறிஞர்கள் இருவரும் வழக்கைத் தள்ளுபடி செய்தார்கள். தமிழகத் தில் கூட இந்து கோயில்களுக்கு தமிழக அரசு மானியம் கொடுக்கிறது. திருவாரூர் தேரை ஓட்டியதும் நினைவில் இருக்கிறது.

அதோடு இந்த வழக்கில் இரண்டு நீதிபதி களும் அறிய வகையில் சில கருத்துக்களை வழங்கியுள்ளார்கள்.

“அரசியல் சட்டத்தை உருவாக்கிய நம் மேதகு முன்னோர்கள் “மதச்சார்பற்ற நாடு” என இந்தியாவின் வடிவத்தை வரைந்துள்ளார் கள். “வேற்றுமையில் ஒற்றுமை” என்பதில் தான் இந்தியாவின் இதயத் துடிப்பே அடங் கியுள்ளது.”

இந்திய நாடு சுதந்திரம் அடைந்த போது, நாட்டுப் பிரிவினையையும் நாடு கண்டது, மத வெறி கொழுந்து விட்டு எரிந்தது, கொலைக ளும், கொள்ளைகளும், இடமாற்றமும், குடி மாற்றமும் சொல்லொண்ணா துயரங்களும் சூறாவளியாய் சுற்றி வளைத்தன. பாகிஸ்தான் ஒரு இஸ்லாமிய மத நாடு என பிரகடனம் செய்த போது, நாம் ஏன் இந்தியாவை இந்து மத நாடு எனப் பிரகடனம் செய்யக் கூடாது என்ற அழுத்தமும், நிர்ப்பந்தமும் மலையாய் அழுத்தியது. நம் தேசத் தலைவர்கள், நேரு போன்றவர்கள் நிதானம் இழக்காமல், நிர்ப் பந்தத்துக்கு இரையாகாமல் இந்தியா ஒரு மதச்சார்பற்ற நாடு என நிலைநாட்டினார்கள். ஆகவே தான் இந்தியா இன்றும் ஒன்றிணைந்து நிற்க முடிகிறது. சகிப்புத் தன்மையும், நாட் டில் உள்ள எல்லா சமூகங்களையும், பிரிவு களையும் சமமாக மதிக்கும் மனமும் தேவைப் படுகிறது, இதற்கு ஒரே மார்க்கம், அடி நாதம், மதச்சார்பற்ற மாண்புதான். இந்த வகையில் தான் நீதிபதிகள் தங்கள் கருத்தைப் பொழிந் துள்ளார்கள். இவர்களின் இந்தக் கருதுகோள் களை மற்ற நீதிபதிகளும் கறாராக கடைப் பிடிக்க வேண்டும் என்பதுதான் இன்றைய தேவை.

இந்திய அரசியல் சட்டத்தில் உள்ள சட் டங்களை மன சுத்தியோடு ஏற்றுக் கொண்டு பதவிப் பிரமாணம் எடுத்துக் கொள்ளும் நீதிபதிகள், அரசியல் சட்டத்தில் சொல்லப் பட்டுள்ள மதச்சார்பற்ற கொள்கைகளுக்கும், சமத்துவக் கொள்கைக்கும் (சோசலிசம்) உடன்பட்ட ஊடிஅஅவைவநன நீதிபதிகள் என்று தான் பொருள்.

ஆனால் பல நேரங்களில் தீர்ப்புகள் இதற்கு மாறாக தடம் மாறி போகின்றன.

உதாரணமாக, ஒரிசா மாநிலத்தில் ‘கிர ஹாம் ஸ்டெயின்ஸ்’ என்ற கிறிஸ்தவ பாதிரி யாரையும், அவரின் இரண்டு மகன்களையும் உயிரோடு கொளுத்திக் கொன்ற இந்து மத வெறியர்களுக்கு ஆயுள் தண்டனை வழங்கப் பட்ட தீர்ப்பில் சில தேவையற்ற, ஆட்சேபகர மான வாசகங்கள் எழுதப்பட்டிருந்தன. பனி ரெண்டு ஆண்டுகள் விசாரணை நடந்த பின் னும் இந்தத் தீர்ப்பில் இப்போது இப்படி ஒரு நிகழ்வு.

கொலையாளியான தாரா சிங் தான் கொலை செய்ததற்கான காரணத்தைச் சொன் னது. “ஏழை இந்து மலைவாழ் மக்களை மயக்கி கிறிஸ்தவ மதத்துக்கு மாற்றும் செயலுக்கு ஒரு நல்ல பாடத்தைக் கற்பிக்கத்தான் கிறிஸ் தவ பாதிரியார் கிரஹாம் ஸ்டெயின்ஸையும், அவரின் இரண்டு மகன்களையும் உயிரோடு கொளுத்தினேன்”- என்று சொன்னான். அவன் இந்து மத வெறியில் சிக்கி அப்படிச் சொன்னான். ஆனால் பெரிய சோகம், உச்ச நீதிமன்றம் தன் தீர்ப்பில் சொன்ன தேவையற்ற கருத்துரைகள் அனைவரையும் கலக்கிவிட்டன.

நீதிபதிகள் பி. சதாசிவம் மற்றும் பி.எஸ். சௌஹான் தங்கள் தீர்ப்பில் எழுதியவை:

“கிரஹாம் ஸ்டெயின்ஸூம், அவரின் இரண்டு குழந்தைகளும் வாகனத்தில் உறங் கிக் கொண்டிருந்த போது, அவர்களை உயி ரோடு கொளுத்திக் கொன்றமைக்கான உள் நோக்கம் என்னவென்றால், ஏழை மலைவாழ் மக்களை கிறிஸ்தவ மதத்துக்கு மாற்றிய கிரஹாமின் மத நடவடிக்கை தான் காரணம்.

ஒரிசா உயர்நீதிமன்றம் இவைகளையெல் லாம் மிக நேர்த்தியாக பாராட்டியதோடு, கீழ் கோர்ட் வழங்கிய தூக்கு தண்டனையை ஆயுள் தண்டனையாக மாற்றியதை நாங்கள் (உச்சநீதிமன்ற நீதிபதிகள்) சம்மதிக்கிறோம்”.

பஜ்ரங்தள் அல்லது ஆர்.எஸ்.எஸ். சொல் லும் உள்ளக் கிடக்கை போல் இந்த வாசகங் கள் வடிவம் கொண்டிருப்பதால், ஒரு சிவில் சொசைட்டி அமைப்பு நீதிபதிகளின் இந்த வித சிந்தனைப் பார்வையை ஆட்சேபித்து வழக்குத் தொடுத்தது.

ஒரு நல்ல அம்சம். உச்சநீதிமன்றம் உட னடியாக சுதாரித்துக் கொண்டது. தன் தீர்ப்பின் தேவையற்ற வாசகங்களை திருத்தி எழுத முனைந்தது. உண்மையிலே இந்த உடனடி முனைப்பைப் பாராட்டியே ஆக வேண்டும்.

“எப்படி இருப்பினும் இந்த நிகழ்வு (எரிக் கப்பட்ட நிகழ்வு) பனிரெண்டு ஆண்டுகள் கடந்து விட்டன. ஒரிசா உயர்நீதிமன்றம் வழங் கிய ஆயுள் தண்டனையை தூக்கு தண்ட னையாக உயர்த்தத் தேவையில்லை என்று கருதுகிறோம்.

“வேறு ஒருவரின் மத நம்பிக்கையில் உள்ளவரை நிர்ப்பந்தப்படுத்தியோ, தூண் டியோ, மயக்கியோ, அந்த மதத்தை விட இந்த மதம் தான் சரியென சல்லாபப் படுத்தியோ மத மாற்றம் செய்வது ஏற்புடையதல்ல” என்று எழுதி விட்ட வாசகத்தையும் உச்சநீதிமன்றம் திருத்தி எழுதியது. “வேறு ஒருவருடைய மத நம்பிக்கையில் எந்த வகையிலும் தலையிடு வது நியாயம் இல்லை” என்று திருத்தியது.

இந்த வகையில் உச்சநீதிமன்றத்தின் தலைமை நீதிபதி எஸ்.எச். கபாடியாவையும் பாராட்டியே ஆக வேண்டும்.

தாங்கள் எழுதிய சிந்தனைப் பார்வையை தாங்களே திருத்தி எழுத முன்வந்த நீதிபதிகள் பி.சதாசிவம், பி.எஸ். சௌஹான் இருவரை யும் கூட பாராட்ட வேண்டும். நீதிமன்றத்தில் இப்படி அவர்களே திருத்த முன் வந்தது சரித்திர வரலாறு பொருந்திய அபூர்வ நிகழ்ச்சி.

பல மதங்களைக் கொண்ட, பல கலாச் சாரங்களைக் கொண்ட இந்தியா போன்ற ஒரு நாட்டில், பொருளாதார ரீதியாக, சமூக ரீதியாக ஏற்றத் தாழ்வுகள் நிரம்பவே உள்ள இந்தியா போன்ற ஒரு நாட்டில் இந்திய அரசியல் சட்டத்தில் ஜொலிக்கும் மதச்சார்பற்ற கொள்கையை, சமத்துவக் கொள்கையை, பதவிப் பிரமாணம் எடுத்து அரசுப் பணியாற் றும் எவரும், அதிலும் குறிப்பாக நீதிபதிகள் கடைப்பிடிப்பது அவசியமாகும்.

இன்றைய கார்ட்டூன்