கடமை தவறாத திருச்சி ஆர்.டி.ஓ

திருச்சி ஆர்டிஓ சங்கீதா (33). போக்குவரத்துத்துறை அமைச்சர் நேரு போட்டியிடும், திருச்சி மேற்கு தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலராக உள்ளார். சொந்த ஊர், சேலம் மாவட்டம் மேட்டூர். இவரது தந்தை சண்முகம், கால்நடைத் துறையில் துணை இயக்குநராக இருந்து ஓய்வு பெற்றவர். 2000ம் ஆண்டு சென்னை அரசு சித்த மருத்துவக் கல்லூரி யில் பிஎஸ்எம்எஸ் படித்த சங்கீதா, சென்னையில் ஏழு ஆண்டுகள் டாக்டராக பணி யாற்றியுள்ளார்.

2009ம் ஆண்டு டிஎன்பி எஸ்சி தேர்வெழுதி, பயிற்சி ஆர்டிஓவாக தேர்வானார். திரு வாரூரில் பயிற்சி கலெக்டராக பணியாற்றிய சங்கீதா, ஆறு மாதங்களுக்கு முன், திருச்சி ஆர்டிஓவாக பதவியேற்றார்.

கடந்த, 5ம் தேதி அமைச் சர் நேருவுக்கு நெருக்கமான வருக்குச் சொந்தமான ஆம்னி பஸ்சில் பணம் இருப் பதாகக் கிடைத்த ரகசிய தக வலின்படி, அந்த இடத்துக்கு டிரைவருடன் சென்று, பஸ் சில் பதுக்கி வைக்கப்பட்டி ருந்த, 5 கோடியே, 11 லட்சத்து, 27 ஆயிரம் ரூபாய் பணத்தை பறிமுதல் செய்தார்.

அவர் அளித்த பேட்டி வருமாறு-

முதல் முறையாக தேர்தல் பணியாற்றுகிறீர்கள்; எப்படி உள்ளது?

எந்த வேலையையும் ஈடுபாட்டுடன் செய்வது என் வழக்கம். தேர்தல் பணியையும் அப்படித்தான் செய்கிறேன். முதல்முறை என்பதால், எனக்கு எந்த, ‘டென்ஷனும்’ இல்லை.

நீங்கள் பறிமுதல் செய்த 5.11 கோடிக்கு பிறகு மிரட்டல் வந்ததா?

இதுவரை நேரடியாகவோ, மறைமுகமாகவோ, எந்த மிரட்டலும் வரவில்லை. ஏன்... ஒரு போன் கூட வரவில்லை; எந்த மிரட்டலுக்கும் அஞ்சமாட்டேன்.

உங்கள் குடும்பத்தினரின் மனநிலை என்ன? கணவர் என்ன சொன்னார்?

என் பணியை இன்னும் சிறப்பாக செய்யும்படி கூறினர். எனக்கு யாரும் தடையாக இருக்க மாட்டார்கள்.

உங்களது இந்த அதிரடி நடவடிக்கைகள் தொடருமா?

என் பணியைத் தான் நான் செய்கிறேன். இதில், அதிரடியெல்லாம் ஒன்றும் கிடையாது. தவறு எங்கே நடந்தாலும், அதை சட்டப்படி அணுகுவேன். எப்போதும் என் கடமையிலிருந்து தவற மாட்டேன். என் கடமையை செய்வதற்காக, எனக்கு எந்த புகழ்ச்சியும் வேண்டாம்.

இன்றைய கார்ட்டூன்