எகிப்து: மக்கள் வரலாறு படைக்கிறார்கள்

எகிப்து மக்களின் பேரெழுச்சியை உலகம் முழுவதும் உள்ள மக்கள் மிகவும் ஆவ லுடன் கவனித்துக்கொண்டு வருகிறார்கள். ஜனவரி 25இலிருந்து பிப்ரவரி 9ஆம் தேதி வரையிலான பதினைந்து நாட்களில் இப் பேரெழுச்சியில் லட்சக்கணக்கான எகிப்தி யர்கள் பங்கேற்றுள்ளார்கள். அனைத்துப் பிரிவு மக்களும், குறிப்பாக இளைஞர்கள், தொழிலாளர்கள், மத்தியதர வர்க்கத்தினர், சாமானிய ஆண்கள் - பெண்கள் என அனைத்துப் பிரிவினரும், ஹோஸ்னி முபாரக் கின் எதேச்சதிகார ஆட்சிக்கு எதிராக அணி திரண்டு வருகிறார்கள். முபாரக் ஆட்சியை முடிவுக்குக் கொண்டுவருவதிலும், புதிய ஜனநாயக அமைப்பை உருவாக்குவதிலும் அவர்கள் அனைவரும் ஒன்றுபட்டிருக்கிறார் கள். கெய்ரோவில் உள்ள சுதந்திரச் சதுக்கத் தில் (கூயாசசை ளுளூரயசந) குழுமிய மக்கள் காட்டிய வீராவேசம் மற்றும் உள்ள உறுதி அவர்கள் வரலாறு படைத்துக் கொண்டிருக்கிறார்கள் என்பதையே காட்டுகிறது. இப் போராட்டத் தில் இதுவரை சுமார் முன்னூறு பேர் தங்கள் இன்னுயிரைப் பலிகொடுத் திருக்கிறார்கள்.

எகிப்து, எட்டு கோடியே 82 லட்சம் மக்கள் கொண்ட மாபெரும் அரபு நாடாகும். வரலாற்று ரீதியாக, இது அரபு நாடுகளின் அரசியல் மற்றும் கலாச்சார மையமாகும். எகிப்தில் நடைபெறும் நிகழ்ச்சிப் போக்குகள் இப்பிராந்தியத்திலேயே முக்கியமான தாக் கத்தை ஏற்படுத்தும்.

மிகவும் பழமையான சீர்கேடடைந்து கொண்டிருந்த முடியாட்சியை 1952இல் நடைபெற்ற அலுவலர்கள் புரட்சி தூக்கி எறிந்தது. நாசர் மற்றும் ராணுவத்தின் தலை மையின்கீழ் ஒரு மதச்சார்பற்ற குடியரசு அங்கே அமைக்கப்பட்டது. அது, அரபு தேசிய வாதத்திற்கான ஒளிவிளக்காக மாறியது. சூயஸ் கால்வாயைக் கைப்பற்றித் தங்கள் ஆளுகைக்குள் கொண்டுவர எத்தனித்த மேற்கத்திய ஏகாதிபத்திய வல்லரசுகளின் மத்தியில் அது சீற்றத்தை ஏற்படுத்தியது. நாசரின் தலைமையில் எகிப்து, அணிசேரா இயக்கத்தின் ஒரு முன்னணி உறுப்பு நாடாக மாறியது. ஆனால், எழுபதுகளில் நிலைமை கள் முற்றிலுமாக மாறின.அமெரிக்கா - இஸ்ரேல்

ராணுவக் கூட்டணியின் மையம்

1970களில் அன்வர் சதாத்தின் கீழ் எகிப்து தன்னுடைய பொருளாதாரத்தை மேற்கத்திய நாடுகளுக்குத் திறந்துவிட்டது. சதாத், அமெரிக்காவின் ஆதரவுடன் 1979இல் இஸ்ரேலுடன் ஓர் இகழார்ந்த (iகேயஅடிரள) ஒப்பந்தத்தைக் கையொப்பமிட்டார். எகிப்து - இஸ்ரேல் கூட்டணியானது மத்தியக் கிழக்கு நாடுகளைத் தன்னுடைய கட்டுப்பாட்டில் கொண்டுவருவதற்கு அமெரிக்காவிற்கு வழி கோலியது. அமெரிக்கா ஆரம்பத்தில் சதாத் திற்கும் பின்னர் முபாரக் ஆட்சிக்கும் பல பில் லியன் டாலர்கள் கொட்டிக்குவித்து, அவர்க ளின் ஆட்சிகளைத் தன் கட்டுப்பாட்டிற்குள் வைத்துக் கொண்டது. இந்த ஆட்சிக்கு முட்டுக்கொடுப்பதற்கான ஒரு ராணுவத் தைப் பேணிப் பாதுகாப்பதற்காக அமெரிக்கா விடமிருந்து ஆண்டொன்றுக்கு 1.3 பில்லியன் டாலர்களை எகிப்து பெற்றுக் கொண்டிருந் தது. பாலஸ்தீன இயக்கத்தை முடக்கிட இஸ்ரேலுக்கு எகிப்து ஒத்துழைத்து வந்தது. இஸ்ரேல், காசா பகுதியை முற்றுகையிட்டி ருப்பதற்கு வசதி செய்து கொடுப்பதற்காக காசா பகுதிக்கு எகிப்து வழியாகச் செல்லும் பாதையை சரிப்படுத்தி கொடுத்தது.

எகிப்து, அமெரிக்காவின் ‘‘பயங்கரவாதத் திற்கு எதிரான யுத்தத்தின்” கேந்திரமான கண்ணியாக (மநல டiமே) இருந்து வருகிறது. அமெரிக்க உளவு ஸ்தாபனமான சிஐஏ அமைப்பால் உலகின் பல பகுதிகளில் இருந்தும் கடத்தி வரப்பட்ட கைதிகளை முபாரக் ஆட்சியானது பெற்றுக்கொண்டு, தங்களுடைய ரகசிய சிறைகளில் அடைத்து கொடுமைப்படுத்தி வருகிறது. இத்தகைய கொடூரச் செயல்கள் முபாரக் ஆட்சியானது எந்த அளவிற்கு ஆழமான வகையில் அமெ ரிக்காவுடன் கூடிக் குலாவிக் கொண்டிருக் கிறது என்பதை வெளியுலகத்திற்குத் தோலு ரித்துக் காட்டியிருக்கிறது.

ஏன் இந்த மக்கள் எழுச்சி?

துனீசியாவில் நடைபெற்ற வளர்ச்சிப் போக்குகளின் தாக்கத்தை அடுத்து, எகிப் தில் கெய்ரோ, அலெக்சாண்ட்ரியா, சூயஸ் மற் றும் இதர நகரங்களில் நடைபெற்ற மக்களின் பெருந்திரள் ஆர்ப்பாட்டங்களுடன் ஜனவரி 25 மக்கள் எழுச்சி தொடங்கியது. துனீசியா வில் பென் அலி ஆட்சி வீழ்த்தப்பட்டது, எகிப் தில் மக்கள் எழுச்சி என்னும் தீப்பொறியை ஏற்படுத்தியது என்று உலக அளவில் ஊட கங்கள் விரிவானமுறையில் ஒளிபரப்பின. துனீசியா எழுச்சி, எகிப்திய இயக்கத்திற்கு ஒரு தூண்டுகோலாக அமைந்தது என்பது உண்மைதான் என்றபோதிலும், அங்கு நடை பெற்று வரும் நிகழ்ச்சிப்போக்குகள் திடீ ரென்று தன்னெழுச்சியாக ஏற்பட்டது என்று பார்ப்பது சரியானதன்று.கடந்த முப்பதாண்டுகளாக முபாரக் ஆட்சிக் கடைப்பிடித்து வந்த நவீன தாராள மயக் கொள்கைகள் மக்களை மிகப்பெரிய அளவில் துன்ப துயரத்திற்குள் தள்ளியது. நாட்டில் உள்ள மக்களில் 44 விழுக்காட் டினர் நாளொன்றுக்கு இரு டாலர்களுக்கும் குறைவான ஊதியத்திலேயே வாழ்வதாக மதிப்பிடப்பட்டிருக்கிறது. வேலையில்லாத் திண்டாட்டம், குறிப்பாக இளைஞர்கள் மத்தியில் உள்ள நிலைமைகள், மிக உயர்ந்த மட்டத்திற்குச் சென்றிருக்கின்றன. வேளாண் நெருக்கடி விவசாயிகளின் வாழ்வை வள மற்றதாக்கி இருக்கிறது. சட்ட விரோத முத லாளித்துவத்துடன் (உசடிலே உயயீவையடளைஅ) ஆட்சி செய்யும் முபாரக் அரசாங்கம், நாட்டின் நிலம் உட்பட அனைத்து வளங்களையும் பறித்துக் கொண்டுள்ள முதலாளிகளை அரவணைத் துச் செல்லும் அதன் நடைமுறைகள் விரல் விட்டு எண்ணக்கூடிய ஒருசில பெரும் பணக்காரர்களை உருவாக்கி, சமூகத்தில் ஏற்றத்தாழ்வைக் கூர்மையாக்கியுள்ளது.

ஆட்சிக்கு எதிரான அரசியல் கட்சிகளுக் கும் குழுக்களுக்கும் எதிராக ஆட்சியாளர்கள் கடுமையான அடக்கு முறையை ஏவிய போதி லும், சாமானிய மக்களின் போராட்டங்கள் அலையலையாய் எழுந்து கொண்டிருக்கின் றன. தொழிலாளர் வர்க்கத்தின் இயக்கம் எப் போதும் கடுமையாக ஒடுக்கப்பட்டது. அதி கார மட்டத்தில் உருவாக்கப்பட்டுள்ள தொழிற் சங்கங்கள் தவிர, மற்ற எந்தத் தொழிற்சங்க மும் இயங்க அனுமதிக்கப்படவில்லை. 1980 களிலும் 90களிலும் இவ்வாறு தொழிற்சங் கங்கள் மீதான கொடூரமான அடக்குமுறைகள் தொழிலாளர் போராட்டங்களை பலவீனப் படுத்துவதற்கு இட்டுச்சென்றன. ஆயினும் கடந்த பத்தாண்டுகளில், தொழிலாளர்களின் போராட்டங்களில் ஒரு வளர்ச்சிப் போக்கு இருந்தது.

தொழிலாளர் வர்க்கப் போராட்டங்கள்

உலகப் பொருளாதார நெருக்கடி தொழிலா ளர் வர்க்கத்தை மிகவும் மோசமாகப் பாதித் துள்ளது. நூற்றுக்கணக்கான தொழிற்சாலை கள் மூடப்பட்டுவிட்டன. 2008இலிருந்து தொழிலாளர் வர்க்கப் போராட்டங்கள் கூர் மையாக அதிகரித்தன. 2008 ஏப்ரல் 6 அன்று மஹல்லா அல் குப்ரா என்னும் நகரில் நடை பெற்ற தொழிலாளர்களின் வரலாற்றுச் சிறப்பு மிக்க வேலைநிறுத்தம் ஒரு திருப்புமுனை யாக அமைந்தது. 28 ஆயிரம் தொழிலாளர் களைக் கொண்ட இந்நகரில் வேலைநிறுத்தம் மிகவும் மிருகத்தனமான ஒடுக்குமுறையைக் கொண்டு நசுக்கப்பட்டது. ஆயினும், மஹல்லா போராட்டம் போன்றே எண்ணற்ற போராட்டங்கள் தொழிற்சாலைப் பகுதிகளில் தொடர்ந்து வெடிக்கத் தொடங்கின. 2009இல் மட்டும் 478 தொழிற்பிரிவுகளின் நடவடிக் கைகள் நடந்துள்ளதைக் கொண்டு, தொழிலா ளர் போராட்டங்களின் தீவிரத்தன்மையை உணர முடியும். இவற்றில் தொழிற்சாலை களில் நடைபெற்றுள்ள 184 உள்ளிருப்பு வேலை நிறுத்தங்கள், 123 வேலைநிறுத்தங் கள், 79 ஆர்ப்பாட்டங்கள், 27 பேரணிகளும் அடங்கும்.

வேலையில்லாத் திண்டாட்டம் அதிக ரித்து வருவதுடன், கடந்த இரண்டு ஆண்டு களில் ரொட்டி (செநயன), அரிசி மற்றும் சமையல் எண்ணெய் போன்ற அத்தியாவசிய உணவுப் பொருள்களின் விலைகளும் கடுமையாக உயர்ந்துள்ளன. இத்தகைய மிக மோசமான பொருளாதார நெருக்கடிதான் முபாரக் ஆட்சி எதிர்கொண்டுள்ள அரசியல் நெருக்கடிக்குப் பின்னணியாகும்.

சிறு துளி பெரு வெள்ளம்

நாட்டின் அமைதியின்மைக்கு இஸ்லா மிய தீவிரவாதிகள் காரணம் என்று முபாரக்கின் ஆட்சி புகார் கூறுகிறது. சுதந்திரச் சதுக்க மானது ஜனநாயகத்திற்கான தன்னெழுச்சி யான இயக்கத்தின் அடையாளம் என்று மேற்கத்திய ஊடகங்கள் சித்தரிக்கின்றன. இரண்டுமே சரியல்ல. பல்வேறு நீரோட்டங் கள் ஒன்றுசேர்ந்து இன்று பெருவெள்ளமாக - மாபெரும் மக்கள் எழுச்சியாகப் - பெருக் கெடுத்திருக்கிறது. மஹல்லா தொழிலாளர் களின் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து 2008இல் இளம் ஆண்களும் பெண்களும் அடங்கிய “ஏப்ரல் 6 குழு” மலர்ந்தது. இக்குழு தான் இவ்வியக்கத்திற்காக மக்களைத் திரட் டும் பணியில் முக்கியமான பங்களிப்பினை ஆற்றியது. தொழிலாளர் வர்க்கப் போராட்டத் தையும், பொது ஜனநாயக இயக்கத்தையும் இக்குழு மிகவும் அற்புதமான முறையில் இரண்டற இணைத்தது. மற்றொரு செல்வாக் கான குழு, “நாங்கள் அனைவரும் காலித் வழி வந்தவர்கள்” என்று அழைக்கப்பட்ட குழுவா கும். போலீசாரின் சித்ரவதையில் உயிரிழந்த ஓர் இளைஞனின் பெயரால் இக்குழு அமைக் கப்பட்டது. இக்குழு சர்வாதிகாரத்திற்கு எதிரான இயக்கமாகவும், குடிமை (சிவில்) உரிமைகளுக்கான இயக்கமாகவும் போராடிக் கொண்டிருக்கிறது. மத்தியதர வர்க்கத்தின் பல்வேறு பிரிவினர் மத்தியிலும் இவ்வியக்கம் செல்வாக்குடன் விளங்குகிறது. இவ்வியக்கத் தின் முழக்கங்களும் கோரிக்கைகளும் தீர்மானகரமான முறையில் மதச்சார்பின்மை யை உயர்த்திப் பிடிக்கக்கூடிய விதத்தில் அமைந்திருக்கின்றன. “வெஞ்சின தினம்” (“னுயல டிக சுயபந”) என்று பெயரிடப்பட்ட ஜனவரி 25 தேதிய அறைகூவலில், முதல் கோரிக் கை, குறைந்த பட்ச ஊதியத்தை மாதத்திற்கு 1200 எகிப்திய பவுண்டுகளாக அதிகரித்திட வேண்டும் என்பதும், வேலையில்லா இளை ஞர்களுக்கு மானியங்கள் வழங்க வேண்டும் என்பது மாகும். நாட்டில் அமலில் உள்ள அவசர நிலையை முடிவுக்குக் கொண்டுவர வேண் டும், சிறையில் அடைக்கப்பட்டுள்ள கைதி களை விடுதலை செய்திட வேண்டும், நாடாளுமன்றத்தைக் கலைத்திட வேண்டும், அரசியலமைப்புச் சட்டத்தில் மாற்றங்கள் கொண்டுவர வேண்டும் என்பவை இதர கோரிக்கைகளாகும். நாட்டின் பிரதான எதிர்க்கட்சியான இஸ்லாமிய சகோதரத்துவம் (ஆரளடiஅ க்ஷசடிவாநசாடிடின), இவ்வியக்கத்தை ஆரம்பித் திடவில்லை. மாறாக, பின்னர் இதில் இணைந்து கொண்டது. மாற்றத்திற்கான தேசிய சங்கம் (சூயவiடியேட ஹளளடிஉயைவiடிn கடிச ஊாயபேந) என்று அமைக்கப்பட்ட மேடையில் இக்கட்சியும் ஓர் அங்கமாகும். மதச்சார்பற்ற மற்றும் ஜனநாயகக் கட்சிகளும் இம்மேடை யில் அங்கம் வகிக்கின்றன. இக்குழுக்கள் அனைத்தும் ஒன்று சேர்ந்துதான் முகமது எல் பாரடே அவர்களை அரசியல் மாற்றத்திற்கான பேச்சுவார்த்தையில் பேசுவதற்கான குழு விற்குத் தலைவராகத் தேர்ந்தெடுத்தன.

அதே சமயத்தில், புதிதாக நியமனம் செய்யப்பட்ட துணை அதிபர் சுலைமான், எதிர்க்கட்சிகளுடனும் குழுக்களுடனும் துவங்கிய பேச்சுவார்த்தைகள் எவ்வித முன் னேற்றத்தையும் ஏற்படுத்திடவில்லை. முபா ரக் நீக்கப்பட வேண்டும் என்கிற கோரிக் கையையும் ஏற்க ஆட்சியாளர்கள் மறுத்துவிட் டனர். மாறாக, ஊழியர்களுக்கு ஊதிய உயர்வு, ரொட்டி (செநயன)யின் விலையைக்

குறைக்க முயற்சித்தல் மற்றும் இயக்கத்தின் அரசியல் கோரிக்கைகளை மட்டுப்படுத்தக் கூடிய விதத்தில் சிற்சில சலுகைகளை அறிவித்திருக்கின்றனர்.

அமெரிக்காவின் அக்கறை

எகிப்தில் நடைபெறும் மக்கள் எழுச்சி யை கண்டு ஒபாமா நிர்வாகம் முழுமையாக அதிர்ச்சி அடைந்திருக்கிறது. எகிப்து ஆட்சி யாளர்களின் மீதான நம்பகத்தன்மை குறித்து மக்கள் மத்தியில் நிலவிவரும் ஐயங்கள் மற்றும் முபாரக்கைச் சுற்றியுள்ள அடிவருடி களின் சொத்துக் குவியல் ஆகியவை குறித்து எகிப்தில் உள்ள அமெரிக்கத் தூதரகத்தின ரின் விக்கிலீக்ஸ் கம்பியில்லாத் தந்திகள் (கேபிள்கள்) வெளிப்படுத்தியுள்ள போதிலும், என்ன நடக்க இருக்கிறது என்பதனை அவர் களால் யூகிக்க முடியவில்லை. வெகுஜனக் கிளர்ச்சிகள் நடைபெற்று ஒரு வாரம் கழிந்த பின்னர், முபாரக் ஆட்சி மாற்றத்திற்கு வழி யேற்படுத்திட வேண்டும் என்று தீர்மானித் திருக்கிறது. அமெரிக்காவின் நலன்கள் பாது காக்கப்படக் கூடிய விதத்திலும், எகிப்துக்கும் இஸ்ரேலுக்கும் இடையிலான உறவுகள் மாற்றம் ஏதுமின்றி தக்க வைக்கக்கூடிய விதத்திலும் “இயல்பான இடைமாற்றத்தை” (“டிசனநசடல வசயளேவைiடிn”) அமெரிக்கா விரும்புகிறது. இவற்றை மனதில் கொண்டுதான் அமெ ரிக்கா, இகழார்ந்த உளவுத்துறை தலை வராகவும் தற்போது துணை அதிபராகவும் இருக்கும் சுலைமானை இடைக்கால அரசாங்கத்திற்குத் தலைவராக நியமித்திட அமெரிக்கா முயற்சித்துக் கொண்டிருக்கிறது. ஆயினும், முபாரக் செப்டம்பரில் தன் பதவிக் காலம் முடியும் வரை பதவியிலிருந்து விலகப் போவதில்லை என்று கூறி, அமெரிக்காவின் ஆலோசனையை ஏற்க மறுத்துவிட்டார்.

அமெரிக்காவும் இஸ்ரேலும் துனீசியா வைப்போல் எகிப்தை அக்கறையற்று விட்டு விட முடியாது. அமெரிக்க ஏகாதிபத்தியத் துடனான ராணுவக் கூட்டணி தொடர்வதற்கு என்ன வேண்டுமானாலும் செய்திட அவை முயற்சிக்கும். இதனை உத்தரவாதப்படுத்திட எகிப்திய ஆளும் வர்க்கங்களையும் ராணுவத் தையும் இழுத்திட அமெரிக்கா முயற்சிக்கும்.

தவறான கற்பிதங்கள்

எகிப்தில் நடைபெற்றுவரும் நிகழ்வுகள் குறித்து உருது ஊடகங்கள் சிலவற்றிடமிருந் தும் இந்தியாவில் உள்ள முஸ்லிம் மதத் தலை வர்கள் சிலரிடமிருந்தும் விசித்திரமான முறை யில் பிரதிபலிப்புகள் வெளியாகி இருக்கின் றன. முபாரக்கை ஒழித்துக் கட்டுவதற்காக அமெரிக்காவே ஏற்பாடு செய்த எழுச்சி என்று சில உருது செய்தித்தாள்களின் கட்டு ரையாளர்கள் இதனைச் சித்தரிக்கிறார்கள். இதற்கு அவர்கள் முபாரக் மாற்றியமைக்கப்பட வேண்டும் என்று அமெரிக்க அதிபர் ஒபாமா உடனடியாக விடுத்த அழைப்பை ஆதார மாகச் சுட்டிக் காட்டுகிறார்கள். எகிப்தில் மக்கள் கிளர்ச்சி தொடங்கி ஒரு வாரம் வரை கண்டுகொள்ளாமல் இருந்த அமெரிக்க நிர்வாகம் அதன்பின்னரும் வாளாவிருந்தால் பாதிப்புகள் கடுமையாகிவிடும் என்பதை உணர்ந்தே, தங்கள் விசுவாசியான முபாரக் கைப் பதவியிலிருந்து கீழிறக்க அது விரும் பியது என்பதைக் கண்டுகொள்ள அவர்கள் மறுக்கிறார்கள். தன் செல்வாக்கை அங்கே நிலைநிறுத்திக் கொள்ள, முபாரக் பின்பற்றிய அதே அயல்துறைக் கொள்கை மற்றும் அதே லட்சியங்களை ஈடேற்றக்கூடிய விதத்தில் வேறொரு நபரை ராணுவத்தின் உதவியுடன் - ஆனால் ஜனநாயகத் தேர்தல் மூலமாக - அங்கே அமர வைப்பதைத் தவிர அதற்கு வேறு வழிதெரியவில்லை. ஜனவரி 25 எகிப்து மக்களின் எழுச்சியை அமெரிக்கா வின் சூழ்ச்சி என்று கூறுவது இவ்வாறு விசித்திரமான ஒன்று. முஸ்லிம் மதத்தலை வர்கள் சிலர் முபாரக்கிற்கு ஆதரவாகக் குரல் கொடுத்திருப்பதற்கு, சவுதி அரேபியாவின் செல்வாக்கு மற்றொரு காரணமாகும். அரபு மக்களின் எழுச்சியைக் கண்டு சவுதி மன்னராட்சி மிரண்டுபோயிருக்கிறது.

இஸ்லாம் அடிப்படைவாதத்துடனும் அமெரிக்க ஏகாதிபத்தியத்திற்கு அடிபணிந் தும் செயல்படும் அவர்களுடைய எதேச்சதி கார ஆட்சியை மக்கள் கேள்வி கேட்கத் துவங்கிவிட்டார்கள். எகிப்தில் நடைபெறும் நிகழ்வுகளானவை வலுவான ஜனநாயக மற்றும் மதச்சார்பற்ற சக்திகள் இஸ்லாமுடன் இணக்கத்துடன் இயங்கிட முடியும் என்பதை பறையறைந்து அறிவித்திருப்பதால் அவை அனைத்து மக்கள் மத்தியிலும் எழுச்சியை ஏற்படுத்தி இருக்கின்றன.

வரலாறு

உருவாகிக் கொண்டிருக்கிறது

“மக்களே தங்கள் சொந்த வரலாற்றைப் படைக்கிறார்கள். ஆயினும் அதனை அவர் கள் தாங்கள் விரும்பிய வண்ணம் படைத் திடவில்லை, அவர்களால் உருவாக்கப் பட்ட சூழ்நிலைகளின் கீழும் அதனை அவர்கள் படைத்திடவில்லை. மாறாக அவற்றைத் தங்கள் ஒரு குறிப்பிட்ட சூழ்நிலையில் கடந்த காலத்தை மாற்றியமைத்திடும் நேரடி போராட் டத்தின் அடிப்படையிலேயே உருவாக்கு கிறார்கள்.’’ (“ஆநn அயமந வாநசை டிறn ாளைவடிசல, ரெவ வாநல னடி nடிவ அயமந வை தரளவ யள வாநல யீடநயளந; வாநல னடி nடிவ அயமந வை ரனேநச உசைஉரஅளவயnஉநள உாடிளநn லெ வாநஅளநடஎநள, ரெவ ரனேநச உசைஉரஅளவயnஉநள னசைநஉவடல நnஉடிரவேநசநன, பiஎநn யனே வசயளேஅவைவநன கசடிஅ வாந யீயளவ.”)என்று மார்க்ஸ் எழுதி இருக்கிறார்.

எகிப்திய மக்கள் வரலாற்றை உருவாக்கிக் கொண்டிருக்கிறார்கள். ஆயினும் அவ்வரலா றானது கடந்த கால சூழ்நிலைகளுக்கும் வரலாற்று நிகழ்வுகளுக்கும் உட்பட்டதாகும். எகிப்து கடந்த காலங்களில் காலனியாதிக்க எதிர்ப்புப் போராட்ட வரலாறு, ஏகாதிபத்திய எதிர்ப்பு தேசியவாதம் மற்றும் மதச்சார் பின்மை ஆகிய வரலாறுகளைக் கொண்ட ஒரு நாடு. அதேபோன்று தொழிலாளர் வர்க்க இயக்கம் மிகவும் கொடூரமான முறையில் ஒடுக்கப்பட்ட வரலாற்றையும், மக்கள் கூட்டங் கூடுவதற்கும், அணிதிரள்வதற்கு மான ஜனநாயக உரிமைகளை அளிப்பதில் கூட கடும் கட்டுப்பாடுகளை விதித்துள்ள ஒரு நாடுமாகும். கடந்த நாற்பதாண்டு கால மாக மத்திய கிழக்கு நாடுகளில் ஒன்றான அது, அமெரிக்காவின் அடிவருடியாக மாறி யிருக்கின்ற வரலாற்றையும் பெற்றிருக்கிறது.

எகிப்திய மக்கள், நவீன தாராளமயக் கொள்கைகளின் விளைவாகத் தங்கள் வாழ்வாதாரங்களின்மேல் தொடுக்கப்பட் டுள்ள கடும் தாக்குதல்களையும் அனுப வித்திருக்கிறார்கள். ஜனவரி 25 இயக்கம் இச்சூழ்நிலைகள் அனைத்தையும் உள்வாங் கிக்கொண்டு அவற்றிற்கு எதிரான ஓர் இயக்கமாகத்தான் செயல்பட்டுக்கொண்டி ருக்கிறது. தங்கள் எதிர்காலத்தை மாற்றியமைப்பதற்காக எகிப்திய மக்கள் மேற்கொண்டுள்ள போராட்டமானது சரியான தொரு திசைவழியில் தொடங்கி இருக்கிறது. ஆயினும், அதனை நீண்ட காலத்திற்கு நடத்திடக்கூடிய வகையில் அதன் தயாரிப் புப் பணிகள் அமைந்திட வேண்டும். புரட்சி கர மாற்றம் சாத்தியமில்லை என்றபோதிலும் கூட, பழைய அமைப்பு முறைக்கு மாறுவது என்ற பேச்சுக்கும் இடமில்லை. எந்த அளவிற்கு மாற்றம் ஏற்பட இருக்கிறது என்பது, ஒன்றுபட்ட இயக்கத்தின் வலிமை மற்றும் மீள்சக்தி ஆகியவற்றைச் சார்ந்தே இருக்கிறது.
                                   தமிழில்: ச.வீரமணி


இன்றைய கார்ட்டூன்