மின்வெட்டு: அரசு செய்ய வேண்டியவை


தமிழகத்தை கடந்த ஐந்தாண்டு காலத்தில் ஆட்சி செய்த தி.மு.க அரசு அனைத்து துறைகளிலும் ஊழலின் உறைவிடமாக செயல்பட்டது. இது தமிழக மின்சார வாரி யத்தையும் விட்டுவைக்கவில்லை. ஊழியர்களின் ஊர் மாறுதல், பதவிஉயர்வு போன்ற சிறிய சிறிய பிரச்சனைகளில் இருந்து, மின்வாரிய செயல்பாட்டுக்கு அடிப்படை தேவையான நிலக்கரி உள்ளிட்ட பொருள களை கொள்முதல் செய்ததிலும் முறைகேடுகளும் ஊழல்களும் நடந்துள்ளன.
கடந்த ஐந்தாண்டு காலத்தில் நடந்துள்ள முறைகேடுகள், ஊழல்களை வெளிக்கொண ரும் விதமாக ஒரு கோடி ரூபாயும், அதற்கு மேலும் உதிரி பாகங்கள் வாங்க போடப்பட்ட கொள்முதல் உத்தரவுகள் அனைத்தையும் ஆழ்ந்த பரிசீலனைக்கு உட்படுத்த வேண்டும்.

கடந்த காலங்களில் மின்சாரத்தை அதிக விலை கொடுத்து வாங்கியதால் மின்சார வாரி யத்தின் கஜானாவே காலியாகும் வகையில் வருவாயில் பெரும்பகுதியை மின்சாரம் வாங்க செலவழித்துள்ளனர். அதாவது 2009-2010 ஆம் ஆண்டில் வாரியத்தின் மொத்த வருமானம் ரூ.17,955 கோடி. அதில் மின்சா ரத்தை வாங்க மட்டுமே ரூ.16,810 கோடி செல வழித்துள்ளனர்.

மின்வாரியம் தனியார் நிறுவனங்களிட மிருந்து அதிக விலை கொடுத்து மின்சாரத் தை வாங்குவதற்கே ஒரு பெரும் தொகையை செலவு செய்வதால் பல ஆண்டுகளுக்கு முன்பு தனியார் நிறுவனங்களிடமிருந்து மின் சாரம் வாங்க அந்நிறுவனங்களோடு போட்ட ஒப்பந்தங்களை பரிசீலிக்க வேண்டும். விலையை குறைக்க வேண்டும், வாரியப் பணம் விரயமாவதை தடுக்க வேண்டும் என பலமுறை முறையிட்டும் அதை முந்தைய அரசு செய்யவில்லை.

மின்சார சேமிப்பு

* தமிழகத்தில் ஏற்பட்டுள்ள மின்பற்றாக் குறையை சமாளிக்க மின்சாரச் சேமிப்பு முக்கியமான ஒன்றாகும். 

* மின்சார சேமிப்பு அமலாக்கம் என்பது ஆடம்பர விழாக்கள், அரசியல் கட்சிகள் நடத் தும் கூட்டங்கள், விழாக்களுக்கு பயன்படுத் தும் மின்சாரத்தின் அளவை குறைப்பது.

* வீடுகளில் பயன்படுத்தப்படும் குண்டு பல்புகளுக்கு பதிலாக மின்சாரத்தை குறை வாக நுகர்வு செய்யும் குழல் விளக்குகளை பயன்படுத்துவது (கேரளத்தில் குழல் விளக்குகளை பயன்படுத்தி மின்சார சேமிப்பு செய்துள்ளதையும் கணக்கில் கொண்டு இங்கேயும் அம்முறையை அமல்படுத்தலாம்.)

* மின்மாற்றிகளுக்கு உள்ள இடை வெளியை குறைத்து, மின்மாற்றிகளை அதிகப்படுத்துவதன் மூலம் மின் இழப்பை தடுத்து மின்சாரத்தை சேமிக்கலாம்.

* மின்சாரத்தை பயன்படுத்தி இயங்கும் இயந்திரங்களை குறிப்பிட்ட காலத்திற்குள் மாற்றுவதன் மூலம் மின்நுகர்வை குறைத்து மின்சாரத்தை சேமிக்கலாம்.

உற்பத்தித் திறனை முழுமையாக பயன்படுத்துவது

1. தமிழக மின் வாரியத்தின் உற்பத்தித் திறனை முழுமையாக உற்பத்தி செய்வதற் குண்டான நடவடிக்கையை எடுக்க வேண் டும். அதாவது புனல் உற்பத்தி மூலம் 2186 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யலாம். கிடைக்கின்ற நீர் ஆதாரத்தை முழுமையாக பயன்படுத்தி உச்சகட்ட அளவு மின்சாரத்தை உற்பத்தி செய்ய வேண்டும்.

2. அனல் மின் நிலையங்களுக்கு தேவை யான நிலக்கரியை முழுமையாக தடையின்றி கிடைக்கச்செய்து, உற்பத்தித்திறன் 2970 மெகாவாட் அளவையும் உற்பத்தி செய்வதற்கு உத்தரவாதப்படுத்திட வேண்டும்.

3. மத்திய அரசின் தொகுப்பில் இருந்து தமிழ்நாடு மின்வாரியத்திற்கு கிடைக்க வேண்டிய பங்கான 2825 மெகாவாட் மின்சா ரத்தை அன்றாடம் முழுமையாக பெறுவதற்குண் டான நடவடிக்கையை எடுக்க வேண்டும்.

4. நாகை மாவட்டத்தில் துறைமுகத்திற்கு அருகாமையில் அமைந்துள்ள பத்து மெகா வாட் மின்சாரம் தயாரிக்கும் நரிமணம் மின் நிலையம் வாரியத்தின் அலட்சியக் கொள்கை யினால் மூடிக்கிடக்கின்றது. நாகை மாவட் டத்தில் கிடைக்கும் எரிவாயுவை பயன் படுத்தி அந்த மின் நிலையத்தை இயங்கச் செய்வதற்கான நடவடிக்கையை உடன் எடுக்க வேண்டும்.

5. இராமநாதபுரம் மாவட்டத்தில் வழுதூ ரில் எரிவாயு மூலம் மின்சாரத்தை உற்பத்தி செய்யும் 92 மெகாவாட் திறன் கொண்ட மின் நிலையம் (க்ஷழுசு) எலக்ட்ரிக் கம்பெனி ஒப்பந் தம் மூலம் கட்டுமானப்பணி முடிந்து, 2008 இல் உற்பத்திக்கு வந்தது. உற்பத்திக்கு வந்த ஒரு வருடம் கூட முழுமையான உற்பத்தி செய்யாமல் பழுதாகி ஒன்றரை ஆண்டுகளாக மூடிக்கிடக்கின்றது. அதை உடனடியாக இயங்கச் செய்வதற்குண்டான நடவடிக்கை யை எடுக்க வேண்டும். 

6. குத்தாலத்தில் 92 மெகாவாட் எரிவாயு மின்நிலையம் இயங்காமல் கிடக்கின்றது. 

7. குந்தா நீர்மின்திட்டம் பவர் ஹவுஸ்- 2 ன் உற்பத்தி 175 மெகாவாட் முடங்கிக்கிடக் கின்றது. மின் உற்பத்தி செய்து மின்சாரத்தை வெளியில் கொண்டு செல்லும் டிரான்ஸ்பார் மர் மீது நீர்க்குழாய் உடைந்த காரணத்தினால் மண் சரிந்து மின் உற்பத்தி இல்லாமல் உள் ளது. பராமரிப்பிற்கு உண்டான போதுமான ஊழியர்கள் இருந்திருந்தால் இதை தவிர்த் திருக்க முடியும். 

8. பேஸின் பிரிட்ஜில் உள்ள 4 ஒ 30 மெகா வாட் திறனுள்ள 120 மெகாவாட் மின் உற்பத்தி நிலையத்தை 24 மணி நேரமும் இயக்குவதற் கான திட்டங்கள் தயாரிக்கப்பட்டு கிடப்பில் போடப்பட்டுள்ளதை துரிதப்படுத்தி அதை அமலாக்கிட வேண்டும்.

9. தேசிய அனல் மின் கழகம் மின்சாரத் தை குறைந்த விலையில் கொடுப்பதற்கு தயா ராக உள்ளது. அந்த மத்திய பொதுத்துறை நிறு வனத்திடமிருந்து மின்சாரத்தை முழுமை யாக பெறுவதற்கு தமிழக அரசு உடன் நட வடிக்கை எடுக்க வேண்டும்.

10. மின் பயனீட்டு உற்பத்தியாளர்கள், உற் பத்தி செய்யப்படும் மின்சாரத்தில் அவர்க ளின் தேவைபோக மீதமுள்ள 600 மெகாவாட் மின்சாரத்தை தமிழக அரசின் செல்வாக்கை பயன்படுத்தி குறைவான விலையில் பெறுவ தற்குரிய நடவடிக்கையை எடுக்க வேண்டும்.

நீண்டகால நிவாரணமாக

மின்நிலையங்கள் அமைக்கும் பணியை வேகப்படுத்துவது

(அ) வடசென்னை அனல் மின் நிலை யத்திற்கு அருகாமையிலேயே இரண்டு 600 மெகாவாட் மின் நிலையம் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. அந்த மின் நிலையங் கள் மே 2011 லும்,நவம்பர் 2011 லும் கட்டு மானப் பணிகள் முடித்து உற்பத்தியை துவங்க வேண்டும். ஆனால் நடைபெற்றுள்ள பணிகள் அதை உறுதி செய்யும் நிலையில் இல்லை. 

(ஆ) மேட்டூரில் 600 மெகாவாட் மின் உற் பத்தி செய்யும் பணிகள் நடைபெற்று வருகின் றன. கட்டுமானப் பணிகள் 2011 செப்டம்பருக் குள் முடித்து, உற்பத்தியை துவங்க வேண் டும். ஆனால் பணிகள் அதற்கேற்ப நடை பெறவில்லை என்பதுதான் உண்மை. 

(இ) வடசென்னையிலும், வல்லூரிலும் முறையே அமைய உள்ள 600 மெகாவாட், 500 மெகாவாட் ஆகிய இரு திட்ட கட்டுமான பணி ளும் திட்டமிட்டவாறு முடிகின்ற நிலை யில் இல்லை. புதியதாக பொறுப்பேற்றுள்ள அரசு, வடசென்னையில் அமைய உள்ள 600 மெகாவாட் மின்உற்பத்தியின் கட்டுமானப் பணிகளை ஏற்கனவே திட்டமிட்டவாறு அக்டோபர் 2011 லும்,வல்லூரில் அமைய உள்ள மின் நிலையத்தின் பணியை டிசம்பர் 2011லும் முடிப்பதற்குண்டான நடவடிக்கை யை எடுக்க வேண்டும். வல்லூரில் கிடைக் கும் மின்சாரத்தை முழுமையாக தமிழகத் திற்கே அளிக்க தமிழக அரசு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

(ஈ) கூடங்குளம் அணு மின்நிலையத்தின் முதல் அலகு, அதாவது 1000 மெகாவாட் உற் பத்தி செய்யக்கூடிய மின்நிலையம் திட்ட மிட்ட தேதிகளில் உற்பத்தியை துவங்காமல், உற்பத்தி துவக்கம் பலமுறை தள்ளிவைக்கப் பட்டு, டிசம்பர் 2010 ல் உற்பத்தியை துவங்கும் என அறிவிப்பு வெளிவந்தது. ஆனால் மின் உற்பத்தி துவக்கப்படவில்லை. தமிழக அரசு உடனடியாக தலையிட்டு கூடங்குளம் அணு மின் நிலையத்தின் முதல் அலகு உற்பத்தி யை உடனடியாக துவங்க நடவடிக்கை எடுக்கவேண்டும். இதன் மூலமாக தமிழகத் திற்கு 500 மெகாவாட் மின்சாரம் உடனடியாக கிடைக்க வாய்ப்புள்ளது. 

(உ) நெய்வேலி லிக்னைட் கார்ப்பரேஷ னுக்கு சொந்தமான விரிவாக்கம் ஐ&ஐஐ ஒவ் வொன்றும் தலா 250 மெகாவாட் ஆகும். இதன் முதல் யூனிட் மின் உற்பத்தியை மே மாதம் துவக்கியுள்ளது. அதன் முழுமையான மின் உற்பத்தியை தமிழகத்திற்கே அளித்திட தமி ழக அரசு முயற்சி மேற்கொள்ள வேண்டும்.

(ஊ) எண்ணூர் அனல் மின் நிலையம் அருகாமையில் 500 மெகாவாட் மின் உற் பத்தி நிலையம் அமைத்திட அனைத்து ஏற் பாடுகளும் முடிந்து, டெண்டர் விடுகின்ற நேரத்தில் ஆளும் கட்சிக்கு சாதகமான (க்ஷழுசு) எலக்ட்ரிக் கம்பெனி மற்றும் ட்டூவால்யு என்ற கம்பெனியும் தங்களுக்கு ஒப்பந்தப் புள்ளி கிடைக்கவேண்டும் என்ற போட்டியினால் பணி நிறுத்தப்பட்டுள்ளதை விரைவுபடுத்தி பணியை முடித்திட வேண்டும்.

மேற்கூறிய மின் நிலையங்கள் அமைக் கும் பணியை முடித்து உற்பத்தியை துவக்கி னால் ஏற்பட்டுள்ள மின் பற்றாக்குறையை சுலபமாக சமாளிக்க வாய்ப்பு உள்ளது.

இவைகளுக்கு பின்பும் தமிழகத்தில் ஆண்டுதோறும் கூடுதலாக்கும் புதிய மின் இணைப்புகளுக்கு மின்சாரத்தை வழங்க ஒவ்வொரு ஆண்டும் குறைந்தபட்சம் 400 மெகாவாட் திறன் கொண்ட மின் நிலையங் களை அமைப்பதற்குண்டான நடவடிக்கை யை எடுக்க வேண்டும். 

எல்லாவற்றிற்கும் மேலாக தமிழ்நாடு மின் சாரவாரியத்தின் முழு உற்பத்தித்திறனான 10214 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய் வதற்கான உச்சகட்ட முயற்சிகள் மேற்கொள் ளப்படவேண்டும்.

இன்றைய கார்ட்டூன்