தத்தளிக்கும் ஐ.மு.கூட்டணி அரசாங்கம்


சமீபத்தில் பிரதமருக்கும் நாட்டின் தொலைக்காட்சி அலைவரிசைகளின் மூத்த பத்திரிகையாளர்களுக்கும் இடையே நடைபெற்ற சந்திப்பின்போது பிரதமர் அவர்கள் நாட்டையும் நாட்டு மக்களையும் கடுமையாகப் பாதித்துள்ள விலைவாசி உயர்வு மற்றும் மெகா ஊழல் ஆகியவை சம்பந்தமாக அரசு மேற் கொண்டுள்ள உறுதியான நட வடிக்கைகள் குறித்து ஏதேனும் கூறுவார் என்று பெரிய அளவில் எதிர்பார்க்கப் பட்டது. ஆனால் அவ்வாறு எதுவும் அவர் கூறவில்லை. மாறாக ஐ.மு.கூட்டணி-2 அரசாங்கம் செல்லும் திசை தெரியாது தத்தளித்துக் கொண்டிருப்பது பிரதமரின் கூற்றுக்களிலிருந்து உறுதியாகி இருக் கிறது. 

2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல் சம்பந்தமாக கூட்டு நாடாளுமன்றக் குழு அமைக்கும் பிரச்சனை குறித்து பிரதமர், ‘‘கூட்டு நாடாளுமன்றக் குழு அமைப்பதற்கு நான் குறுக்கே நிற்பது போன்றதொரு தவறான அபிப்பிராயம் முழுமையாக இருக்கிறது. எந்தக் குழுவையும் எதிர்கொள்ள நான் என்றைக்கும் அஞ்சியதில்லை... ‘சீசரின் மனைவியின் நடத்தை சந்தேகத்திற்கு அப்பாற்பட்டது’ போன்றே என்னுடைய நடத்தை இருக்கவேண்டும் என்றே எப்போதும் நான் கூறி வந்திருக்கிறேன்,’’ என்றார். அப்படியென்றால், நாடாளு மன்றக் குளிர்காலக் கூட்டத்தொடரை வீணாக்கியது ஏன் என்று எங்களுக்குச் சொல்ல முடியுமா? ஊழல் புரிந்தவர்கள் எவராக இருந்தாலும் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று முன்பு கூறிய உறுதிமொழிகளையே இப்போதும் அவர் கூறியிருக்கிறார். காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகளில் ஊழலில் ஈடுபட்டவர்கள் மீது 90 நாட்களுக்குள் நடவடிக்கை எடுத்து விட்டோம் என்று சுட்டிக்காட்டியபோது, அதனை யாரும் பெரிதாக பொருட்படுத்தவில்லை. ஆயி னும் இப்போதும் அவர், குற்றம்புரிந்தவர் களை விட்டுவிட மாட்டோம் என்று மீண்டும் ஒருமுறை பதிவு செய்திருக் கிறார்.

2ஜி ஊழலில் அரசாங்கத்திற்கு ஏற் பட்டுள்ள வருவாய் இழப்பு குறித்து மத் திய தணிக்கைத்துறைத் தலைவர் (சிஏஜி) குறிப்பிட்டிருக்கும் தொகை கற்பிதமான ஒன்று என்று டெலிகாம் அமைச்சர் கூறியிருப்பதையே பிரதமரும் ஒப்புக் கொண்டிருப்பது போலவே தோன் றுகிறது. மக்களுக்குத் தொலைத்தொடர்பு சேவைகளைக் குறைந்த கட்டணத்தில் அளிப்பதற்காக டெலிகாம் ஆபரேட்டர் களுக்கு மலிவாக உரிமங்கள் அளிக்கப் படுவதற்காகவே இவ்வருவாய்களை அரசாங்கம் வசூலிக்க வில்லை என்று அரசுத்தரப்பில் கூறப்படுகிறது. இது எவ் வளவு பித்தலாட்டமான வாதம் என் பதை, அவ்வாறு அரசாங்கத்திடமிருந்து மிகவும் குறைந்த விலைக்கு உரிமங் களைப் பெற்ற ஸ்வான் மற்றும் யூனிடெக் நிறுவனங்கள் அவற்றை பின்னர் வேறு பல நிறுவனங்களுக்கு ஆறு மடங்குக்கும் அதிகமான விலைக்கு விற்றிருப்பதி லிருந்து தெரிந்து கொள்ள முடியும். 

இவ்வாறு குறைந்த மதிப்பீட்டில் 2ஜி ஸ்பெக்ட்ரம் அலைவரிசை ஒதுக்கீட்டை அளித்திருப்பதை பிரதமர் அவர்கள், உணவு மற்றும் உர மானியங்களுடன் ஒப் பிட்டிருப்பதுதான் எல்லாவற்றையும்விட மோசமான அம்சமாகும், இத்தகைய ஒப் பீடானது அரசின் வர்க்க குணாம்சத் தைத் தெளிவாகக் காட்டுகிறது. 2ஜி ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு டெலிகாம் துறை யில் உள்ள பெரிய கார்ப்பரேட் நிறுவனங் களுக்கு அளிக்கப்பட்ட மானியம் என் பதை பிரதமர் இதன்மூலம் ஒப்புக் கொள்கிறார். 

இதிலிருந்து மாபெரும் கேள்வி எழு கிறது. அதாவது இந்த அரசாங்கம் யாருக்கு மானியம் அளிக்க விரும்பு கிறது? கைக்கும் வாய்க்கும் எட்டாது வறிய நிலையில் வாடும் ஏழைகளுக்கா? அல்லது உலக பில்லியனர்களின் பட்டிய லில் சேர முயன்றுகொண்டிருக்கும் பெரும் பணக்காரர்களுக்கா? அரசாங்கம் வசூலிக்க மறுக்கும் 1 லட்சத்து 76 ஆயிரம் கோடி ரூபாய் வசூலிக்கப்பட்டால் அதன் மூலம் மக்களின் வாழ்வாதாரத்தை மேம் படுத்திட எந்த அளவிற்கு முடியும் என்று பரிசீலனை செய்து பாருங்கள். இந்தத் தொகை வசூலிக்கப்பட்டால், பின் நாட் டில் உள்ள (வறுமைக் கோட்டிற்கு மேல் உள்ள குடும்பத்தினரையும் சேர்த்து) ஒவ்வொரு குடும்பத்திற்கும் இரு ஆண்டுகளுக்கு கிலோ 2 ரூபாய் என்ற வீதத்தில் மாதந்தோறும் 35 கிலோ உணவு தானியங்கள் அளித்திட முடியும். இவ்வாறு இத்தொகையை வசூலிக்காத தன் மூலம் நாட்டு மக்களுக்கு அளிக்கப் படுவதற்கு சாத்தியமான உணவுப் பாதுகாப்பு கைகழுவப்பட்டிருக்கிறது. இதனை வேறுவிதத்திலும் பாருங்கள். இத்தொகையிலிருந்து நாட்டில் உள்ள அனைவருக்கும் கல்வி உரிமையை எதார்த்தமானதாக மாற்றிட முடியும். புதிய பள்ளிக் கட்டிடங்கள் கட்டுவதன் மூல மும், ஆசிரியர்களை நியமனம் செய்வதன் மூலமும், மதிய உணவுக்கான வசதிக ளை உருவாக்குவதன் மூலமும், பள்ளிச் சீருடைகள் மற்றும் பாடப்புத்தகங்கள் அளிக்கப்படுவதன் மூலமும் நாட்டில் 6 வயதுக்கும் 14 வயதுக்கும் இடையில் உள்ள அனைத்துக் குழந்தைகளுக்கும் பள்ளிக் கல்வியை உத்தரவாதப்படுத்த முடியும்.

ஐ.மு.கூட்டணி-2 அரசாங்கம் அனைவருக்கும் உணவுப் பாதுகாப் பையோ அல்லது கல்வியையோ அளிக்க முன்வரவில்லை. ஆனால் அதற்குப் பதிலாக நாட்டில் உள்ள பெரும் பணக் காரர்களை மேலும் பணக்காரர்களாக் கவே நடவடிக்கைகளை எடுத்துள்ளது. இவர்களது பாஷையில் கூறுவதனால், வறிய நிலையில் உள்ளவர்களுக்கு அளிக்கப்படும் சலுகைகள் ‘மானியங் கள்’ என்றும் இது பொருளாதாரத்தில் ‘மோசமான’ அம்சம் என்றும் கூறும் இவர்கள், அதே சமயத்தில் பணக்காரர் களுக்கு அளித்திடும் சலுகைகளை ‘ஊக்கத்தொகை’ என்றும் அது பொரு ளாதாரத்தின் ஆரோக்கியத்திற்கு ‘அவசி யம்’ என்றும் அழைக்கிறார்கள். 

பிரதமர் அவர்கள், ஐ.மு.கூட்டணி-2 அரசாங்கத்தின் அமைச்சரவை உருவாக் கப்பட்ட சமயத்தில், 2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல் தொடர்பான உண்மைகள் முழு மையாகத் தெரியாததாலேயே ஆ.ராசா டெலிகாம் அமைச்சராக மீண்டும் மறு நியமனம் செய்யப்பட்டார் என்று கூறி யிருப்பது மிகவும் விந்தையாகும். 2ஜி உரி மங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்ட காலத் திலிருந்தே இது தொடர்பான ஊழல்க ளும் வெளியாகத் துவங்கிவிட்டன. 2008 பிப்ரவரியிலேயே இம்முறைகேடு களைச் சுட்டிக்காட்டி மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் நாடாளுமன்றத் தலை வர்கள் பிரதமருக்கு எழுதி இருக்கிறார் கள். அவை இப்போது அதிகாரபூர்வமாக ஒப்புக்கொள்ளப்பட்டிருக்கின்றன. ஐ.மு. கூட்டணி-2 அரசாங்கம் அமைக்கப் பட்ட சமயத்திலும், இப்பிரச்சனைகள் பகிரங்கமாகிவிட்டன. ஆயினும் ஆ.ராசா அமைச்சராகப் பதவிப் பிரமாணம் எடுத்துக் கொண்டார். 

இவ்வாறு ஊழல் சம்பந்தப்பட்ட பிரச் சனையாக இருந்தாலும் சரி அல்லது விலைவாசி உயர்வு சம்பந்தப்பட்ட பிரச்சனையாக இருந்தாலும் சரி, நாட் டின் பெரும்பான்மையாக உள்ள சாமா னிய மக்களுக்கு எவ்வித உறுதிமொழி யையும் அளித்திட பிரதமர் தவறிவிட்டார். 

ஆயினும் பெரிய அளவில் பொரு ளாதாரச் சீர்திருத்தங்கள் வர இருப்பதை பிரதமர் கோடிட்டுக் காட்டியிருக்கிறார். சென்ற ஆண்டு அந்நிய மூலதன வரத்து சுமார் 31 விழுக்காடு வீழ்ச்சியடைந் திருப்பதை ஒரு செய்தியாளர் சுட்டிக்காட் டியபோது பிரதமர் இதனைக் குறிப்பிட்டி ருக்கிறார். அதாவது, இன்சூரன்ஸ் துறை யில் அந்நிய நேரடி முதலீட்டின் உச்ச வரம்பை அதிகரித்தல், வங்கிகளை மேலும் தனியார்மயமாக்கக்கூடிய விதத் தில் வங்கிச் சீர்திருத்தங்கள் கொண்டு வருதல், ரூபாய் முழுமையாக மாற்றிய மைக்கப்படுதல் (கரடட உடிnஎநசவibடைவைல டிக வாந சரயீநந), ஓய்வூதிய நிதியங்களைத் தனியாரி டம் ஒப்படைத்தல் போன்ற - ஐ.மு. கூட்டணி-1 அரசாங்கத்தின் போது இடதுசாரிக் கட்சிகளால் தடுத்துநிறுத் தப்பட்ட - தாராளமய சீர்திருத்தங்கள் மீண்டும் வர இருக்கிறது என்பதே இதன் பொருளாகும். இவ்வாறு, உலகப் பொரு ளாதார மந்தத்தின் மோசமான விளைவு களைத் தடுத்து நிறுத்திட நமக்கு உதவிய தற்போதைய வலுவான இந்தியப் பொருளாதாரத்தைப் பலவீனப்படுத்தப் போகிறார்கள். இத்தகைய நடவடிக்கை கள் அந்நிய மற்றும் உள்நாட்டு முதலாளி களுக்கு கொள்ளை லாபத்திற்கு வழி யேற்படுத்தும் அதே சமயத்தில், கோடிக் கணக்கான நாட்டு மக்களின் வாழ்க் கையில் நாசத்தை ஏற்படுத்திடும்.
தமிழில்: ச.வீரமணி

இன்றைய கார்ட்டூன்