ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காண்போம் என்றார் அண்ணா அன்று. ஏழைகள் சிரிக்கவும் இல்லை. இறைவனைக் காணவும் இல்லை. இந்த வகையில் இறைவன் இல்லை என்ற அவர்களது நாத்திகக் கொள்கை நிரூபணமாயிற்று. இப்போது அண்ணாவின் தம்பியான கலைஞர், ஏழைகள் இருக்கும் வரை இலவசங்கள் தொடரும் என்ற பொன்மொழியை உதிர்த்திருக்கிறார். இவர்கள் இலவசங்களை வாரி வழங்குவதற்காகவே, அதன் மூலம் அரசியல் அறுவடை நடத்துவதற்காகவே, ஏழைகள் வாழ்வில் முன்னேறாமலும் அவர்கள் சிரித்து அதில் இறைவன் தெரிந்துவிடக்கூடாது என்பதிலும் தெளிவாகவே இருக்கிறார்கள்.
இடதுசாரிகள் ஏன் வெல்லவேண்டும்? ஒரு தத்துவார்த்தக் கண்ணோட்டம்
இருபதாம் நூற்றாண்டில் இந்திய நாடு ஒரு உண்மையான சமுதாய மாற்றத்தை அடைந்துள்ளது. பல்லாயிரமாண்டுகளாக “தொடுவதும் சமமாக வாழ்வதும் தவறு. ஏன், கண்ணால் பார்ப்பதே கூட தவறு” என்று கடைப்பிடிக்கப்பட்டு வரும் தீண்டாமைக் கொடுமைகளின் பல்வேறு வடிவங்களுடன் கட்டமைக்கப்பட்ட சமத்துவமற்ற சமுதாயம் தான் நமது இந்திய சமுதாயம். இந்த இரு பதாம் நூற்றாண்டிலே நீதியின் முன்பு சமத் துவம் நிலை நாட்டப்பட்டுள்ளது. இந்த நாட் டின் குடிமக்களுக்கான உரிமைகள் அனைத் தும் அனைவருக்கும் சமமாக வழங்கப்பட்டுள் ளது. அதேபோன்று வாக்களிப்பதற்கு உரிய வயதை அடைந்த அனைவருக்கும் வாக்குரி மையும், குடியுரிமையும் வழங்கப்பட்டுள்ளது. மக்களால் தேர்ந்தெடுக்கப்படும் நாடாளுமன்ற ஜனநாயகம் அனைவருக்கும் வழங்கப்பட்டு, தமது அரசாங்கத்தை தாங்களே தேர்ந்தெடுக் கும் உரிமையையும் இந்த சமுதாய மாற்றம் அளித்துள்ளது. உண்மையான சமத்துவம் என்பது வெகு தூரத்தில் இருக்கிறது என்றா லும், இந்த சமுதாய மாற்றத்திற்கென்று ஒரு முக்கியத்துவம் உள்ளது என்று கூறினால் அது மிகையல்ல. இந்த சமுதாய மாற்றமானது நமது நீண்ட கால ஜனநாயகப் புரட்சியை உருவாக்குவதில் ஒரு கணிசமான பங்கினை ஆற்றியுள்ளது.
தீண்டாமை ஒழிப்பு போராட்டங்களும் தமிழக அனுபவங்களும்
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கர்நாடக மாநிலக்குழு ஏற்பாடு செய்த சாதிய ஒடுக்குமுறைகள்-தீண்டாமை ஒழிப்பு ஆய்வரங்கம் பெங்களூரில் நடைபெற்றது. இந்த ஆய்வரங்கத்திற்கு தமிழ்நாட்டிலிருந்து தோழர் பி.சம்பத் அழைக்கப்பட்டிருந்தார். “தீண்டாமை ஒழிப்பு போராட்டங்களும் தமிழக அனுபவங்களும்” என்ற தலைப்பில் தோழர் பி.சம்பத் ஆற்றிய உரையின் சாராம்சம் வருமாறு:
இந்தியச் சாதியமைப்பு:
சாதியமைப்பு என்பது இந்தியாவில் மட்டுமே நிலவக்கூடிய தனித்தன்மை வாய்ந்த சமூக ஒடுக்குமுறையாகும். மனிதகுல வரலாற்றில் ஆதிகாலப் பொதுவுடைமைச் சமுதாயத்திலிருந்து ஆண்டான் அடிமைச் சமுதாயம் பிற நாடுகளில் உருவெடுத்த போது, இந்தியாவில் ஆண்டான் அடிமைச்சமுதாயமே ஆரியர்கள் என்றும் தாசர்கள் என்றும் வருண சமுதாய வடிவில் உருவெடுத்தது. பிற்காலத்தில் விஞ்ஞானம் - தொழில்வளர்ச்சி ஏற்பட்டு ஏராளமான வேலைப்பிரிவினைகள் உருவெடுத்தபோது, சாதிக்குள் சாதியாகவும் உப சாதிகளாகவும், ஏராளமான சாதிகள் உருவெடுத்தன. அந்த ஆண்டான் அடிமை சமுதாயத்தில் உருவெடுத்த சாதியமைப்பு இன்றளவும் உழைக்கும் வர்க்க ஒற்றுமைக்கு தடைச்சுவராக நீடித்து வருகிறது. எனவே, ஆதியிலிருந்து இன்று வரை சாதியும், வர்க்கமும் பின்னிப்பிணைந்தே உள்ளன. சாதிய ஒடுக்குமுறைகளும். வர்க்க ஒடுக்குமுறைகளும் பின்னிப் பிணைந்தே உள்ளன. நிலப்பிரபுத்துவம், ஏகாதிபத்தியம், முதலாளித்துவம் ஆகிய அனைத்து சுரண்டும் வர்க்கங்களும் சாதியமைப்பை பாதுகாத்தே வந்துள்ளன. இந்தியச் சாதியமைப்பு பற்றி பி.டி.கோசாம்பி, தேவிபிரசாத் சட்டோபாத்யாயா இ.எம்.எஸ்.நம்பூதிரிபாட் போன்ற மார்க்சிய அறிஞர்கள் ஏரளாமான ஆய்வுகளை நடத்தியுள்ளனர். இதனை உரிய முறையில் நாம் உள்வாங்கிக் கொள்ள வேண்டும்.
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)
