விஜயசிம்ஹா எனும் வலைதள எழுத்தாளர் ளுஐகுலு.ஊடீஆ எனும் வலை தளத்தில் சுதந்திர இந்தியாவின் தலைசிறந்த முதல்வர்கள் குறித்த ஒரு பட்டியல் வடிவமைத்துள்ளார். இந்தியாவில் இதுவரை 344 முதல்வர்கள் இருந்துள்ளனர் என்கிறார் விஜயசிம்ஹா. அப் பட்டியலில் முதல் இடத் தைப் பிடித்தவர் தோழர் ஜோதிபாசு ஆவார். தலைசிறந்த முதல்வர்கள் முதல் பத்து பேர் பட்டியலில் தோழர் ஜோதிபாசுவுடன் தோழர்கள் இ.எம்.எஸ்.நம்பூதிரிபாட்டும் மாணிக்சர்க்காரும் இடம் பிடித்துள்ளனர்.
அந்த பட்டியல் :1.ஜோதிபாசு/மார்க்சிஸ்ட்கம்யூனிஸ்ட் கட்சி (மேற்கு வங்கம்)2. கிருஷ்ண சின்கா/ காங்கிரஸ் (பீகார்)3. இ.எம்.எஸ். நம்பூதிரிபாட்/மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி (கேரளா)4. ஷேக் அப்துல்லா/ தேசிய மாநாடு (காஷ்மீர்)5. பி.சி.ராய்/ காங்கிரஸ்.(மேற்கு வங்கம்)6. சி.என்.அண்ணாதுரை /தி.மு.க (தமிழகம்)7. லால்டெங்கா/ மிசோ தேசிய முன்னணி (மிசோராம்)8. கே.என். கட்ஜூ / காங்கிரஸ் (மத்திய பிரதேசம்)9.மாணிக் சர்க்கார்/ மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி (திரிபுரா)10. என். ரெங்கசாமி /என்.ஆர்.காங்கிரஸ் (புதுச்சேரி)இந்த பட்டியல் உருவாக்கியதில் உள் ளடங்கிய அடிப்படை அம்சங்கள் என்ன? விஜய சிம்ஹா குறிப்பிடுகிறார் :8 தன்னைவிட மக்கள் மற்றும் தேசம் உயர்ந்தது என எண்ணியதும் செயல் பட்டதும்.8மதம்/சாதி/பிரதேசம்/வசதி அல்லது ஆண்/பெண் எனும் வேறுபாடுகளை தவிர்த்தது.8 எல்லா மதங்களையும் சமமாக பாவித்தது மட்டுமின்றி அரசியல் கொள்கைகளில் மதத்தை ஈடுபடுத்தாமல் இருந்தது.8 எளிய மக்களை முதலில் அணுகுவது; முன்னேற்றத்தில் அனைவரையும் அரவணைத்துக் கொண்டது.
