பதினாறாவது மக்களவைக்கான பொதுத் தேர்தல்களுக்கான அட்டவணை அறிவிக்கப் பட்டிருக்கிறது. ராஜீவ் காந்தி படு கொலை அல்லது கார்கில் யுத்தம் போன்ற சமயங்களில் சீர்குலைவு மற்றும் தாமதம் ஏற்பட்டதைத் தவிர்த்துவிட்டுப் பரிசீலனை செய்தோமானால் இதற்குமுன் நடைபெற்ற தேர்தல்களைவிட இப்போது தேர்தல்களுக்கு நீண்ட காலம் திட்டமிடப்பட்டுள்ளது.ஏப்ரல் 7 அன்று தொடங்கி மே 12 முடிய ஐந்துவாரங்களில் ஒன்பது கட்டங்களாக தேர்தல்கள் நடைபெறவுள்ளன.
இதுவரை நடை பெற்ற தேர்தல்களிலேயே இதுதான் அதிகஎண்ணிக்கையிலானதாகும். தேர்தல்நடத்திட நீண்டகாலம் திட்டமிடப்பட்டிருப் பதற்கு சிலர் மத்தியிலிருந்து சில முறையீடுகள் இருந்தபோதிலும், இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் 324 முதல்329ஆவது பிரிவுகளின் கீழ் “நாடாளுமன் றத்திற்கான அனைத்துத் தேர்தல்கள் குறித்தும் மேற்பார்வை, தேர்தல் வாக்காளர் பட்டி யல்களைத் தயார் செய்வதற்கான கட்டுப்பாடு மற்றும் தேர்தலை நடத்தும் விதம் ஆகியவை குறித்து’’ தேர்தல் ஆணையம் மட்டுமே அதிகாரம் படைத்திருக்கிறது. எனவே, நாட்டிலுள்ள வாக்களிக்கத் தகுதியுள்ள அனைத்துவாக்காளர்களும் நியாயமாகவும் நேர்மை யாகவும் வாக்களிக்கக்கூடிய விதத்திலும், அவர்களது அடிப்படை உரிமைகளை உத்தரவாதப்படுத்திடக்கூடிய விதத்திலும் தேர் தலை நடத்திட வேண்டியதும் தேர்தல் ஆணையத்திற்கு அளிக்கப்பட்டுள்ள அதிகாரத்துக்குட்பட்ட கடமையாகிறது. நாட்டின் சட்டம் - ஒழுங்கு பிரச்சனை, தேர்தல்களை சீர்குலைப்பதற்கான அச்சுறுத்தல்கள் எழக்கூடும் என கமுக்கமான முறையில் தகவல்களைப் பெறக்கூடிய அதி காரம் தேர்தல் ஆணையத்திற்கு மட்டுமே உண்டு என்பதாலும், அவ்வாறு பெறப்பட்ட தகவல்களின் அடிப்படையில் அத்தகைய இடங்களில் அமைதியான முறையில் நியாயமாகவும் நேர்மையாகவும் தேர்தல்களை நடத்திடுவதற்காக, அந்த இடங்களுக்கு தேவையான அளவிற்குப் பாதுகாப்புப் படையினரை அனுப்பி வைப்பதற்கான நடவடிக் கைகளை மேற்கொள்வதற்கும் தேர்தல் ஆணையம் அதிகாரம் பெற்றிருக்கிறது.
