வெ.சுந்தரம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
வெ.சுந்தரம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

மக்களின் கோபம் மாற்றத்தை உருவாக்கும்

நடைபெற உள்ள சட்டமன்ற தேர் தல் பிரச்சாரத்தில் ஊழல், குடும்ப ஆட்சி, ஜனநாயக உரிமைகள் பறிப்பு, படுகொலை அரசியல் உள்ளிட்ட பல பிரச்சனைகள் முன்னுக்கு வந்துள்ளன. அனைத்துப் பகுதி மக்களையும் வாட்டி வதைக்கும் விலைவாசி உயர்வு ஒரு முக்கிய பிரச்சனையாக மக்களால் பேசப் படுகிறது. ஆளும் திமுகவிற்கு எதிராக கோபாவேசமாக எழுந்துள்ளது. அதற்கு நியாயமான பதில் கூற முடியாமல் ஏப்ரல் 4ம் தேதி முரசொலியில் கலைஞரே கேள்வி எழுப்பி, பதில் கூறும் பகுதியில் விலைவாசி உயர்வு பற்றி விசித்திரமான விளக்கம் அளித்துள்ளார்.

தோளோடுதோள் நிற்கவேண்டியவர்கள் வாள் எடுத்து வீசலாமா?

அம்பேத்கர் படிப்பு வட்டம், மதுரை மற்றும் ஏப்ரல் 14 வ.புதுப்பட்டி இணைந்து வெளியிட்டிருக்கும் நூல் “போராளி எனும் அதிகாரம்”( உத்தப்புரம் குறித்த தலித் தரப்பு பதிவுகளும் விவாதங்களும்).

உத்தப்புரம் குறித்தது என்பதால் ஆர்வத்தோடு நூலை வாங்கிப் படித்தபோது மிகவும் வருத்தமும் ஏமாற்றமும் அடைய நேரிட்டது. மார்க்சிஸ்ட் கட்சியுடன் பல கருத்து வேறுபாடுகள் இருந்தாலும் உத்தப்புரம் பிரச்சனையில் ஒன்றுபட்டு நிற்க வேண்டியவர்கள் ஏன் இந்த அளவு கட்சி மீதும், தோழர்கள் மீதும் தாக்குதல் நடத்தி யுள்ளனர் என்று வியப்பு ஏற்பட்டது.

உத்தப்புரம் சுவர் இடிப்பு நிகழ்ந்தது 6 மே 2008. அதையொட்டி ஜூலை 2008 வரை எழுதப்பட்ட தலித் முரசு தலையங்கம், தீக்கதிர் வண்ணக்கதிரில் வெளி வந்த சு.ரவிக்குமார், சுகிர்த ராணி, அழகிய பெரியவன் ஆகியோரின் கட்டுரைகள், காலச்சுவடில் வெளிவந்த தி.ஸ்டாலின் கட்டுரை முதலில் இடம் பெற்றுள்ளன. 66 பக்கங்கள் கொண்ட நூலில் கடைசி 3 பக்கங்கள் சிபிஎம் கம்பம் கிளைச்செயலாளர் கடிதம் பின் இணைப்பாக உள்ளது. மேலே குறிப்பிட்ட கட்டுரைகள் 19 பக்கங்கள் மட்டுமே. மீதமுள்ள 33 பக்கங்கள் நூலுக்காக யாழன் ஆதி, அ.ஜெகநாதன், ஸ்டாலின் ராஜாங்கம் ஆகியோரால் எழுதப்பட்டுள்ளன. 2008 மே மாதம் நிகழ்ந்த நிகழ்வு பற்றி உடன்வினையாற்றி எழுதப்பட்ட கட்டுரைகளோடு இந்த மூவரும் தற்போது எழுதிய கட்டுரைகளை இணைத்து 2010ல் வெளியிட்டிருப்பது ஏன்? நூலைப் படித்தபோது இவர்களின் நோக்கம் தெளிவாகிவிட்டது.

இன்றைய கார்ட்டூன்