கி.இலக்குவன் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
கி.இலக்குவன் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

கோயபல்ஸ் பிரச்சாரம் எடுபடாது

மேற்கு வங்கத்தில் 34 ஆண்டுகால இடதுமுன்னணியின் ஆட்சிக்காலத்தில் எதுவுமே செய்யப்படவில்லை என்று தடா லடியாகப் பேசிவருகிறார் மம்தா பானர்ஜி, ஆமாம் ஆமாம் என்று உரத்த குரலில் முழங்குகிறார் சோனியாகாந்தி,ஏழை மக்களைப்பற்றி இடது முன்னணி கவ லைப்படவே இல்லை என்கிறார் “இளவர சர்” ராகுல் காந்தி. இவர்களின் இந்த பேச்சுக்கள் மேற்கு வங்க மக்களையே அவ மதிப்பதுபோல் இருக்கின்றன என்று சரியாகவே வருணித்துள்ளார் சோமநாத் சட்டர்ஜி, இடதுமுன்னணி எதையுமே செய்யவில்லை என்றால் மேற்கு வங்க மக்கள் ஏழுதேர்தல்களில் தொடர்ந்து அதற்கு வாக்களித்திருப்பார்களா என்ற கேள்வியை அவர் எழுப்பியுள்ளார். புளு கினாலும் பொருத்தமாகப் புளுக வேண் டும் என்பார்கள். கடந்த 34 ஆண்டுகளாக சிறப்பான முறையில் சாதனைகளை நிகழ்த்தியுள்ள மேற்கு வங்க இடது முன் னணியின் ஆட்சியை நேரில் கண்டுவரும் வங்கமக்கள், இந்த கோயபல்ஸ் பிரச்சா ரத்திற்கு பலியாகிவிடுவார்கள், என்று மம்தா கும்பல் நினைத்தால், அது பகற் கனவாகவே முடியும்.

பெட்ரோலுக்கு வரி விதிக்காமல் இருக்க முடியாதா?

பெட்ரோலிய கச்சா எண்ணெய்யின் விலை சர்வதேசச் சந்தையில் தொடர்ந்து ஏறிவருவதையும் அதனைக் காரணமாகக்காட்டி இந்திய அரசு பெட்ரோலின் விலையை அடிக்கடி ஏற்றிவருவதும் அதன் தொடர் விளைவாக அனைத்துப்பொருட்களின் விலையும் தாறுமாறாக ஏறிவருவதும் நமது அன்றாட அனுபவமாக இருந்து வருகிறது.இதே பிரச்சனையை வியட்நாம் அரசு எவ்வாறு அணுகி வருகிறது என்பது ஒருமக்கள் நல அரசுக்கும் முதலாளிகளுக்கு ஆதரவான அரசுக்கும் இடையே உள்ள வேறுபாட்டை படம் பிடித்துக்காட்டுகிறது. கச்சா எண்ணெய்யைத் தூய்மைப்படுத்துவதற்கான வசதிகள் இல்லாத ஒரு நாடு வியட்நாம் என்ற உண்மையையும் சேர்த்துப்பார்த்தால் இந்த வேறுபாட்டைத் துல்லியமாகப் புரிந்து கொள்ளலாம்.



கச்சா எண்ணெய்யின்விலை ஒரு பீப்பாய் 101 டாலர் என்ற அளவை எட்டியவுடன் மக்களின் மீது சுமை ஏறாமல் பாதுகாப்பதற்காக வியட்நாம் அரசு இரண்டு முடிவுகளை எடுத்தது. ஒன்று, பெட்ரோல் விற்பனையாளர் களுக்கு லிட்டருக்கு 600 டாங் அளவுக்கு இழப்பீட்டை நேரடியாக வழங்கியது. விலையை நிலைப்படுத்து வதற்கான நிதி என்ற ஒன்றும் அந்நாட்டில் உருவாக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு லிட்டர் பெட்ரோல் வாங்கும் போதும் நுகர்வோர் அளிக்கும் விலையில் 300 டாங் இந்த நிதிக்கு செல்கிறது.

வியட்நாம் அரசு எடுத்த மற்றொரு முக்கிய நடவடிக்கை வரிக்குறைப்பு .இறக்குமதி செய்யப்படும் தூய்மைப்படுத்தப்பட்ட பெட்ரோலின் மீதான வரி (பூஜ்யம் ) என்ற அளவுக்குக் குறைக்கப்பட்டு விட்டது.பெட்ரோலுக்கு முதலில் 20 சதம் வரி விதிக்கப்பட்டு வந்தது. இது பின்னர் 6 சதமாகவும் தற்போது 0 சதமாகவும் குறைக்கப்பட்டு விட்டது. இதேபோல டீசலுக்கு விதிக்கப்பட்ட வரி 15 சதத்திலிருந்து 2 சதமாகவும் பின்னர் 0 சதமாகவும் குறைக்கப்பட்டுவிட்டது.

முதலாளித்துவ சமூகம் அப்படித்தான்!

வாழ்க்கை நிலைகளில் ஏற்பட்ட அவலங்களால் விரக்தியின் விளிம்புக்குத் தள்ளப்பட்ட ஒன்றரை லட்சத்துக்கு மேற் பட்ட விவசாயிகள் நாடுமுழுவதிலும் தற் கொலை செய்து கொண்ட சோக வரலாறு தொடர்ந்து பேசப்பட்டு வரும் நிகழ்வு. ஆனால் தொழிலாளிகளின் மத்தியிலும் தற்கொலைச்சாவுகள் நிகழ்ந்துள்ளதைப் பற்றிக் கேள்விப்பட்டதுண்டா? ஆம், அவை யும் அண்மை ஆண்டுகளில் பதிவாகியுள் ளன. அதுவும் தமிழ்நாட்டின் பின்னலாடைத் தலைநகரான திருப்பூரில் இது கடந்த சில ஆண்டுகளாக நடை பெற்று வருகிறது என்ற அதிர்ச்சியளிக்கும் செய்தியை நீங்கள் அறிவீர்களா?
தமிழக அரசின் குற்றச்செயல்கள் பதி வேடுகள் வெளிப்படுத்தியுள்ள செய்தி இது . 2007 ம் ஆண்டில் திருப்பூர் மாவட்டத்தில் பதிவான தற்கொலைகளின் எண்ணிக்கை -526. இதே ஆண்டில் மாநில அளவிலான சராசரி 373. அதாவது இந்த எண்ணிக்கை 41 சதவீதம் கூடுதலானது. 2008ம் ஆண்டில் பதிவான தற்கொலைகளின் எண் ணிக்கை 555. மாநில சராசரி 380. இது 46 சதவீதம் கூடுதல். 2009ம் ஆண்டில் பதி வான தற்கொலைச் சாவுகளின் எண் ணிக்கை 491. இதுவும் மாநில சராசரியை விடக் கூடுதலானது தான். வேதனை யளிக்கும் இந்த நிகழ்வுகளின் பின்னணியை விளக்கும் கட்டுரையொன்று டிசம்பர் 8ம் தேதி ‘பிரன்ட்லைன்’ இதழில் வெளியிடப்பட்டது.

திருப்பூரில் இயங்கி வரும் 6200 ஆயத்த ஆடை நிறுவனங்களில் 4லட்சம் தொழி லாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர். இவர் களில் சரிபாதி அளவில் பெண் தொழி லாளர்கள் இடம்பெற்றுள்ளனர். மொத்த தொழி லாளர்களில் 90 சதவீதம் பேர் வெளிமாவட் டங்களைச் சேர்ந்தவர்களாக இருந்து வந்தனர். இப்போது ஒரிசா , பீகார், ராஜஸ்தான் மற்றும் ஜார்கண்டைச் சேர்ந்த சுமார் 40 ஆயிரம் தொழிலாளர்கள் திருப்பூர் நகர உழைப்பாளர் படையில் இணைந்துள்ளனர். ஏற்றுமதிக்கான ஆர்டர்களின் அடிப்படை யிலேயே உற்பத்தி நடைபெற்றுவருவதால், ஆண்டு முழுவதும் ஒரே சீரான முறையில் உற்பத்தி என்பதற்கு பதிலாக, சில பருவங்க ளில் இரவுபகல் என்ற வேறுபாடின்றி கடும் மும்முரத்துடன் வேலை நடைபெறுவதும் மற்ற சில பருவங்களில் வேலையும் கூலியும் இன்றி தொழிலாளர்கள் அவதிப்படுவதும் வழக்கமான நடைமுறையாகிவிட்டது.

இன்றைய கார்ட்டூன்