ரஞ்சனி கே.முத்து லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
ரஞ்சனி கே.முத்து லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

நுண்நிதி நிறுவனங்கள் - வரமா? சாபமா?

இலாப நோக்கில் செயல்படும் நுண் நிதி நிறுவனங்கள் - பெண்களுக்கு அதிகாரமளிக்கின்றனவா அல்லது பெண்கள், ஏழைகள், தலித்துகள் மற்றும் குழந்தைகளின் உரிமைகளை மீறுகின்றனவா? என்ற பொருளில் வேலூரில் அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம் நடத்திய கருத்துப் பரி மாற்றத்தில் கிடைத்த படிப்பினைகள்.

தமிழகத்தில் வேலூர் மாவட்டத்தில் 4 பெண்கள் (கடன் வாங்கிய பெண் மற்றும் கடன் வாங்கியவரின் மனைவி)இறந்தது குறித்த விசாரணைக்கு வலியுறுத்தியும், உண் மையை கண்டறியும் நோக்குடனும் அனைத் திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் சார்பில் சென்ற குழுவுடன் நானும் சென்றேன். எனக்கு தெரிந்தவரையில் இவ்விஷயத்தில் தலையீடு செய்து விசாரணையை மேற் கொண்ட முதல் மாதர் அமைப்பு, அனைத்திந் திய ஜனநாயக மாதர் சங்கம்தான். தற்கொலை செய்துகொண்ட லட்சுமி பற்றிய தகவல் மிகவும் அதிர்ச்சியளிப்பதாக உள்ளது. கடந்த சில ஆண்டுகளாக லட்சுமியும் அவரது கண வரும் வேலூர் நகரின் சத்துவாச்சாரி பகுதி யில் வசித்து வந்தனர். இவர்கள், தெருக் களில் உள்ள குப்பைகளை பொறுக்கி தங் களது வாழ்க்கையை நடத்தி வந்தனர். 3-4 ஆண்டுகளுக்கு முன்பு வரை இவர்கள் நாளொன்றுக்கு 400 ரூபாய் சம்பாதித்து தங்க ளது 7 குழந்தைகளையும் பராமரித்து வந்தனர். பார்ப்பதற்கு 15 வயதுடையவர் போலத் தோன்றும் லட்சுமியின் முதல் பெண்ணிற்கு வயது 20 என சொல்கிறார்கள். இவர் திரு மணமாகி கைக்குழந்தையுடன் இருக்கிறார். 3-4 வயதுடைய பெண்குழந்தை இவர்கள் வீட்டின் கடைக்குட்டியாகும். இந்நிலையில், ஒப்பந்தத் தொகையாக 75000 ரூபாயை உட னடியாகச் செலுத்திய நிறுவனம் ஒன்றிற்கு, குப்பை அகற்றும் பணிக்கான ஒப்பந்தம் மாநக ராட்சி, டவுன் பஞ்சாயத்தால் அளிக்கப்பட் டது. இதனால், லட்சுமி மற்றும் அவரது கண வரின் வருமானம் நாளொன்றுக்கு 100 முதல் 150 ரூபாய் எனக் குறைந்தது. எனவே, இவர் கள் தங்களது குடும்பத்தின் பசியைப் போக்கி டவும், குழந்தைகளுக்கு கல்வியை அளித் திடவும் ஒரு நுண்நிதி நிறுவனத்திடம் இருந்து கடன் வாங்கினர். முந்தைய கடனை திருப்பிச் செலுத்திட வேறொரு நிறுவனத் திடம் கடன் வாங்கினர். மஹாசேமம், ஷேர், ஸ்பன்டனா, எப்எப்சிஎல், முன்ஜீவன், காவேரி மற்றும் கிராம விடியல் ஆகிய ஏழு நுண்நிதி நிறுவனங்களிடமிருந்து இவ்வாறு கடன் வாங்கிய இவர்கள் மீள முடியாத கடன் வலையில் சிக்கினர்.

இன்றைய கார்ட்டூன்